விவசாயம்

நான் அடிப்படையில் விவசாய குடும்பத்தை சார்ந்தவன். தற்போது நான் தனியார் பிரிண்டிங் மேனேஜர் ஆக பணிபுரிகிறேன், எனது பெற்றோர் விவசாயம் செய்கிறார்கள். எனது பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க வேலைக்கு செல்கிறேன்.ஏன் இதை சொல்கிறேன் என்றால் விவசாய பின்னணியில் இருந்து கொண்டு என் போன்றவர்கள் பலர் விவசாயம் செய்யாமல் வேறு வேறு வேலைகளுக்கு செல்கின்றனர்.
அதற்கு காரணங்கள் பல உண்டு. இன்றைய பொருளாதார சூழலில் மக்களுக்கு அதிக வருமானம் தேவைப்படுகிறது. அது விவசாயத்தில் கிடைக்காது என்ற எண்ணம் தான் காரணம். எந்த ஒரு தொழிலுலிம் இடர்பாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் விவசாயத்தில் பல இடர்கள் உள்ளதால் அதை செய்யவே பலர் தயங்குகின்றனர். இன்றைய விவசாய குடும்ப பெற்றோர்கள் தங்களோடு இந்த கஷ்டம் போகட்டும் எண்ணத்திலும் தன் பிள்ளைகள் வெளியில் வேலைக்கு சென்றாவது நல்லபடியாக இருக்கட்டும் என்றும் தங்களோடு விவசாய நெறிமுறைகளை நிறுத்திக்கொள்கின்றனர். தற்போதைய சந்ததியினர் அதை அறிந்து கொள்ள விளைவதும் இல்லை.
ஏன் இந்த நிலை.? பருவமழைகளை நம்பியே விவசாயம் நடக்கும் நம் நாட்டில் சுற்றுச்சூழல் மாற்றத்தால் எப்போது மழை வரும் போகும் என்று தெரியாத நிலை. கடனுக்கு வாங்கி விவசாயம் செய்யும் போது வெள்ளம், மழை பொய்ப்பு போன்றவற்றால் நட்டம் அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சூழல் அதிகமாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் அடுத்ததாக ஆட்கள் பற்றாக்குறை தான் விவசாயத்தின் மிகப்பெரிய சவால். உதாரணமாக எங்கள் பகுதியான திருப்பூர், கோவை பகுதியில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் என்பது குதிரைகொம்பாக உள்ளது. விவசாய நிலங்களில் வேலை செய்வதை காட்டிலும் தொழிற்ச்சாலைகளில் வேலை செய்வதை சிறப்பாக எண்ணுகிறார்கள். அடுத்ததாக மத்திய அரசு செய்த அற்புத திட்டம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். ஒட்டு மொத்தமாக விவசாயதிற்கு ஆப்பு வைத்த திட்டம். இன்றைய ஆட்கள் தான் தொழிற்சாலைகள் செல்கின்றனர். பழைய ஆட்கள் மூலமாக நடந்து வந்த கொஞ்ச நஞ்ச விவசாயமும் அம்பேல்.
ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரங்கள் வந்தாலும் அவற்றிற்கு வாடகை கொடுத்து கட்டுபடியாகாத நிலை. பல ஏக்கர் நிலம் வைத்து இருப்பவர்க்கே இயந்திரங்கள் உதவும். ஒன்று இரண்டு ஏக்கர் வைத்துள்ளவர்களுக்கு ..???.
சீனா போன்ற ஒப்பிடுகையில் நமது நாட்டில் ஒரு ஏக்கருக்கான உற்பத்தி என்பது மிகவும் குறைவே. அதற்கு காரணம் பசுமைப்புரட்சி. நமது பசுமை புரட்சி திட்டங்கள் ரசாயனங்களை அறிமுகம் செய்து நிலத்தை கெடுத்து உற்பத்தியை குறைத்துவிட்டன. வெளிநாட்டு ரசாயன உர நிறுவனங்கள் மேல் தான் அரசுக்கு அக்கறையே தவிர. விவசாயத்தின் மேலோ, நாட்டு மக்கள் மேலோ அல்ல. ரசாயன மருந்துகளின் விளைவுகள் கண்கூடாக கண்ட பிறகும் அதை இன்னும் அரசு ஆதரிப்பது விளங்கவே இல்லை...
ஒரு விவசாயி இயந்திரங்கள் மூலம் உழவு செய்து, களைகொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகள் அடித்து, உரம் இட்டு எல்லாம் செய்து விற்பனை செய்கையில். அவனுக்கு கிடைப்பது என்னமோ சொற்பம் தான். விவசாய பொருட்களுக்கு உரிய விலை என்பது எப்போதும் கிடைப்பதே இல்லை. அப்படி மக்களிடம் தான் குறைவாக சென்று சேர்கிறதா என்றால் அதுவும் இல்லை. இடையில் புகுந்து சில மணிகளில் பலமடங்கு லாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் தான் லாபமடைகின்றனர். விவசாயத்தில் சம்பந்தமே இல்லாதவர்கள் கூட விவசாய பொருட்களை வாங்கி இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்று லாபமடைகின்றனர். கார்பரேட் கம்பனிகள் கூட இதில் இறங்கி செயல்படுகின்றன. இருப்பு வைக்கவோ, விலை கிடைக்கவோ முடியாத விவசாயிகள் கொடுத்ததை வாங்கி கொள்ள கூடிய நிலைமை-.



------------ இன்னும் விளையும்

2 comments:

IMMORTALS - 3D

நம்ம தமிழ் படங்கள் சில சொதப்புவது போல் ஆங்கில படங்களும் சொதப்புவதுண்டு அந்த வரிசையில் நானும் தான் வருவேன்னு இந்த படமும் வந்துடுச்சு. இந்த படத்த நான் பாக்க காரணம் ரெண்டு. ஒன்னு 300 படத்த எடுத்தவங்க எடுத்து இருக்காங்கனு, ரெண்டாவது ஹாலிவுட் படங்கள் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.இதுக்கு முன்னாடி டோனி ஜா வோட ONG BAK-3 பார்த்தேன்(இது ஹாலிவுட் இல்லை). நான் பார்த்து ரொம்பவும் நொந்து போன படு மொக்கை படம். அதுக்கு அப்பறம் இந்த படம். ஆனா ONG BAK-3 அளவுக்கு படு மொக்கையாக இல்லை.
படத்தோட கதை என்ன?


படத்தோட கதை படம் பார்த்து புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டமா இருக்கும். உங்களுக்காக கோர்வையா சொல்லி முடிச்சுடறேன்.
முன்னொரு காலத்துல கிரேக்க கடவுள்களுக்கும்(ஜீயஸ்) தீய சக்திகளுக்கும்(டைட்டன்ஸ்) சண்டை அதுல தோத்துபோன டைட்டன்ஸ்கள பாதாள சிறைல வச்சுடறாங்க. அவுங்கள விடுவிக்க ஒரு வில் ஒன்னு இருக்கு. அது இந்த உலகத்துல இருக்கற ஏதோ ஒரு தேவாலயத்துல இருக்கு. இது பிளாஷ்பேக்.
இப்ப அந்த வில்ல எடுத்து டைட்டன்ஸ் களை விடுவிக்க ஒரு குரூப் கெளம்புது. அதுக்கு ஒரு காரணம் ஒன்னு இருக்கனும்ல. அது இந்த உலகத்தயே ஆள்வதற்காம். சரி இந்த குரூப் ஒவ்வொரு தேவாலயமா போய் அங்கிருக்கற சந்நியாசிகள, மக்கள கொன்னுட்டு தேடிட்டு இருகாங்க.அந்த குரூப்புக்கு அரசர் பேரு ஹிபெரியன்.
அடுத்து கட் பண்ணா கிரேக்க நாட்ல ஒரு பகுதில ஒதுக்கப்பட்ட மக்கள் இருக்காங்க. அங்க தான் இருக்காரு நம்ம படத்தோட ஹீரோ தேசியஸ். அந்த இடத்துக்கும் வராங்க ஹிபெரியன் குரூப். ஹீரோவோட அம்மாவை கொன்னுடறாங்க. ஹீரோவையும் கைது பண்ணிடறாங்க. ஒரு பாலைவனத்தில் இருக்கற மடத்துல நாலு பொண்ணுங்க இருகாங்க அதுல ஒரு பொண்ணுக்கு அதிசய சக்தி இருக்கு. அந்த பொண்ணு தேசியஸ அடையாளம் கண்டு சொல்றாங்க இவனால தான் நம்ம மக்களை காப்பாற்ற முடியும்னு சாக போற நிலைமையில் இருக்கற அவன காப்பாத்தரா(ஹீரோயின்). அங்கிருந்து ஹீரோ, ஹீரோயின், துணைக்கு மூணு பேருன்னு தப்பிகறாங்க.


திரும்ப தன்னோட சொந்த ஊருக்கு வராரு ஹீரோ கூட தப்பிச்சவங்களோட. அவங்க அம்மாவ அடக்கம் பண்ணும்போது எதோச்சையா அந்த சக்தி வாய்ந்த வில்லை கண்டுபிடிக்கறார். இதுக்குள்ள வில்லன் ஹிபெரியன் ஹீரோ கிட்ட இருந்து வில்லை கைப்பற்றி டைட்டன்ஸ விடுவிக்க கிரேக்க நாட்டுல இருக்கற டர்டரோஸ் மலைக்கு போறாங்க.
அதுக்குள்ள கடவுள்கள் உதவியோட ஹீரோ கிரேக்கம் வரார். ஹீரோ அங்க படை திரட்டி படைக்கு தலைமை ஏற்று சண்டை போடறார். அதுக்குள்ள வில்லன் ஹிபெரியன் டைட்டன்ஸ விடுவிக்கறார், உடனே ஜீயஸ் கடவுள் தன்னோட ஆட்களோட வந்து டைட்டன்ஸ அழிக்கறார்.
அப்பறம் ஹீரோ வில்லன அழிக்கறார். அவரும் சாகறார். எதிரிகள் எல்லோரும் அழிகிறார்கள். அப்பறம் ஹீரோயின் தன்னோட மகனோட இருக்கிறார். எல்லாம் முடிகிறது.



படத்துல ஒரே ஒரு விஷயம் மட்டும் நல்லா இருக்கு அது ஹாலிவுட்டுகே உண்டான கிராபிக்ஸ். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் உழைப்பு தெரிகிறது. மற்றவை எல்லாம் சொல்லிகொள்ளும் படியாக இல்லை. 3 டி எபக்ட்ஸ் ஒன்றும் சொல்லி பெரிதாக இல்லை.
இவர்களின் முந்தய படமான 300 படத்தின் விறுவிறுப்பு பத்து சதவிகிதம் கூட இல்லை.

0 comments:

நொய்யலின் தாண்டவம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் நொய்யல் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல உயிர்கள் பலியானதும், ஆயிரக்கணக்கான மக்கள் உடைமை இழந்து வாடுவதும் அனைவரும் அறிந்து இருப்பீர்கள்.
மக்களுக்கு உதவிகள் வந்தாலும் என்னை கோபப்பட வைத்த செய்தி. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தந்த நிதிதான். கிட்டத்தட்ட மூன்றாயிரம் உறுப்பினர்களை கொண்ட சங்கம். ஏறத்தாழ அனைவரும் கோடிகளில் வாழ்பவர்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து அளித்த உதவித்தொகை வெறும் ஒரு லட்சம்.
நடுத்தர, ஏழை மக்கள் கூட தங்களால் முடிந்த உதவிகளை தங்கள் உற்றார் உறவினருக்கு செய்து வருகின்றனர். இந்த நிலைமையில் இப்படி ஒரு பேருதவி செய்து இழிவை தேடிக்கொண்டனர் ஏற்றுமதியாளர்கள்.

உதவ விருப்பம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு இந்த பதிவின் மூலம் கேட்டு கொள்கிறேன்.

0 comments:

மீண்டும் கிறுக்கல்கள்

ஒரு மாசமா நேரம் கிடைக்காத காரணத்தால் ப்ளாக் பக்கம் உலாவ முடியல. நேரம் கெடைக்கலனு சொல்றத விட நேரம் ஒதுக்க முடியல. அப்பறம் அனேகமா எல்லாரும் தீபாவளிய சிறப்பா கொண்டாடி இருப்பிங்க. படங்களும் பார்த்து இருப்பீங்க. நானும் மூணு படமும் பார்த்தேன். ஆனா என்னால பகிர்வதற்கு வாய்ப்பு கிடைக்கல.

தீபாவளி அப்ப 7 ஆம் அறிவு பாக்கலாம்னு ஒரு பிளான் பண்ணி ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுவமேனு பாத்தேன் டிக்கெட் விலையெல்லாம் 120, 150 னு போட்டு இருக்கு. அப்படி போய் பக்கனுமானு அந்தன்னைக்கு பாக்கல. வேலாயுதம் பாக்கலாம் இதுக்கு முன்னாடி விஜய் படம் பார்த்து நொந்து இருந்ததால பாக்க தைரியம் வரல. ஸோ வீட்லயே பலகாரம் சாப்பிட்டு, நன்னா தூங்குனேன். மறுநாள் நண்பர்களோட ப்ரோக்ராம் போட்டு கொடுவேரி போலாமுனு போனோம். ஒரே மழை. அதனால போற வழியில் கோபிசெட்டிபாளையத்தில்
7 ஆம் அறிவு பாத்தோம். படம் ஒன்னும் பெருசா இம்ப்ரெஸ் பண்ணல, இருந்தாலும் பாக்கலாம். ஆனா டிக்கெட் ஐம்பது ரூபாய். அதுக்கான ஒரு வசதி கூட இல்ல தியேட்டரில்.

ரெண்டு நாளைக்கு அப்பறம் அதாவது சனிக்கிழமையன்று வேலாயுதம் பாப்போம்னு நண்பர்களுடன் திருப்பூரில் உள்ள உஷா சினி காம்ப்ளெக்ஸ் போனேன். அது வெகு காலமா ஓடம இருந்து புதுசா கட்டி முதல் முறையா வேலாயுதம் போடறாங்க. ஏற்கனவே படம் நல்லா இருக்கு அப்படிங்கற பேச்சால ஹவுஸ் புல். எல்லா தியேட்டகளிலும் இதே நிலைமை.சரி என்ன பண்ணலாம்னு இன்னொரு ஸ்க்ரீன்ல ரா ஒன் பாக்க போனோம்.
திருப்பூரில் வடநாட்டினர் அதிகம் இருப்பதால் அவர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இந்த படமும் சுமார்தான் ஷாருக்கானுக்காக படம் பாக்கலாம்.

கடைசியா மறுபடி ரெண்டு நாள் கழிச்சு வேலாயுதம் பாக்க போனோம். அப்பவும் ஒரே கூட்டம். இந்த தடவ படம் பாக்காம வரக்கூடாது. அப்படி என்னத்த பண்ணி இருக்காங்கனு அடிச்சுபிடிச்சு டிக்கெட் வாங்கி படம் பாத்தேன் அதே உஷாவில். இடைவேளை வரை நல்லாவே சென்றது. விஜய் கஷ்டப்பட்டு டிரெய்ன நிருத்துனதோட படம் முடிஞ்சுதுன்னு நெனைச்சேன். அப்பறம் தான் சொதப்பி இருக்காங்க. இருந்தாலும் படம் நல்லாவே இருந்தது. பாடல்களும் கேட்கும்படி இருந்தது. விஜய்க்கு இது ஒரு ஹிட் படம்.

இதெல்லாம் பார்த்த நான். ப்ளாக் எழுத முடியாத காரணம். (எனது இன்டர்நெட் டேட்டா கார்டு பழுதடைந்துவிட்டது. வேறு ஒன்று வாங்கலாம்னா நிதி பற்றாக்குறை. ஒரு வழிய ரெண்டு நாளைக்கு முன்னாடி வாங்கிட்டேன். நான் இருப்பது திருப்பூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊத்துக்குளியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமம்.எங்க ஏரியாவில் தொலைபேசி வழி இணையம் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இங்கு 3g வசதி இல்லை .அதனால் டேட்டா கார்டு மூலமும் போதுமான வேகம் இல்லை. இருந்தாலும் இணையம் இயக்கிவருகிறேன்.)

என்ன செய்ய கிராமங்களை தான் எந்த ஒரு அரசும் கண்டுகொள்வதில்லையே.

0 comments:

திருப்பூர் எங்கே ?

நான் ஊத்துக்குளியில் வேலை செய்து கொண்டு இருந்தாலும் லேபிள் பிரிண்டிங் வேலை என்பதால் திருப்பூர சார்ந்துதான் எங்க வேலை. திருப்பூருக்கும் ஊத்துகுளிக்கும் 15 கிலோமீட்டர் தான். வாரம் எப்படியாவது கம்பனி வேலையாக மூணு, நாலு தடவையாவது திருப்பூர் வருவேன் கடந்த பத்துநாளா சொந்த வேலைகள் காரணமா திருப்பூர் பக்கம் போக முடியல.. இப்பவும் வேலை இல்லை. சரி இன்னைக்காவது தீபாவளிக்கு துணி எடுக்க போலமேனு போனேன் போனேன்.(மன்னிக்கவும் எனக்கு எடுக்க போனேன்).
தீபாவளி பரபரப்புல இருக்கும்னு பார்த்தா எல்லா கடைகளும் காத்து வாங்கிட்டு கெடக்கு. திருப்பூர்லனு குறிப்பிட்டு சொல்லக்கூடிய சென்னை சில்க்ஸ்ல போன வருசத்துல 25 சதவீதம் கூட்டம் தான் இப்ப இருக்கு. நகை, வீட்டு உபயோகபொருள்கள் வாங்க மக்கள் இப்ப திருப்பூர்ல இல்லை. திருப்பூர் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே உள்ளது. டையிங் பிரச்சனை புதிய ஆட்சி வந்தா மாறிடும்னு நெனச்சவங்களுக்கு ஏமாற்றம்தான். எக்ஸ்போர்ட் கம்பெனிகள்ல கிட்டத்தட்ட வேலையே இல்லை. டொமஸ்டிக் கம்பனிகள் மட்டும்தான் இப்போதைக்கு திருப்பூர்ல தீபாவளி பரபரப்புல ஓடிகிட்டு இருக்குது. இன்னைக்கு நெலமை என்னன்னா போனவருஷம் இதே தீபாவளி டைம்ல எல்லா துணிக்கடைலயும் கூட்டம். பஸ் ஸ்டாண்ட்ல கயிறு கட்டி வரிசையா பஸ் ஏத்துனாங்க. இந்த வருஷம் என்னமோ நெலமை தலைகீழ்உள்ளாட்சி தேர்தல் கூட காரணமா இருக்கலாம்.
இப்ப அங்கங்க சோதனை முறைல டையிங் ஓட்டராங்கனு சொல்றாங்க. இருந்தாலும் ஆட்சில இருக்கறவங்க இந்த பிரச்சனைக்கு யாருக்கும் பாதிப்பு இல்லாம முடிவு எடுத்து கொஞ்சம் சீக்கிரம் கவனிச்சாதான் திருப்பூர் மீண்டும் பழையபொலிவு பெறும்.

0 comments:

சினிமாவும் நானும்

எனது சிறு வயதில் நான் திரைப்பாடல்களோ, திரைப்படமோ அதிகம் கேட்டது இல்லை ஏனென்றால் எங்கள் வீட்டில் மின்சாரம் அப்போது இல்லை. பாட்டரியில் இயங்கும் பிலிப்ஸ் ரேடியோ ஒன்று மட்டும் இருந்தது. அப்போது எப்.எம் கள் இல்லாத காலகட்டம் அதனால் கோவை வானொலி, திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சிகள் மட்டும் கேட்டதுண்டு. அதில் சினிமா பாடல்கள் ஒலிபரப்பு என்பது குறைவே, ஆனாலும் நாடகங்கள், சினிமா ஒலிச்சித்திரம் தவறாமல் கேட்பேன்.

பள்ளி விடுமுறையில் அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் படம் பார்க்க செல்வோம் , வெள்ளி, சனி, ஆகிய நாட்களில் இரவில் தூர்தர்ஷனில் திரைப்படம் போடுவார்கள் அதை பார்போம், பல நாட்கள் தூங்கி விடுவதுண்டு. ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி ஒன்றில் மட்டும் நான் பாடல்கள் பார்த்ததுண்டு. சில வருடங்களில் வீட்டிற்கு மின் இணைப்பு வந்தது, சில மாதங்களுக்கு பிறகு டி.வி வந்தது ஆனாலும் பாடல் கேட்பது ஒரு விருப்பமானதாக இருந்ததில்லை. திரைப்படம் ஞாயிறு மட்டும் பார்ப்பேன்.நானும் உயர்நிலையில் படிக்கும் போது பாட்டு புத்தகங்கள் நண்பர்கள் வாங்கி சினிமாவில் படுவதுபோல் பாடிக்கொண்டு இருப்பார்கள். பாட்டு புத்தகம் வாங்குவது ஒரு போட்டி எந்த புதிய திரைப்படம் வந்தாலும் ஓடி தேடி முதலாவதாக வாங்கினால் அவன் பெரிய ஆள். இந்த வகையில் நானும் வாங்கி சேகரிக்க ஆரம்பித்தேன். அதை வாங்கி ஒருமுறை படிப்பதோடு சரி. அதை திரும்ப படிக்க தோன்றியதில்லை.

கேபிள் இணைப்பு வீட்டிற்கு வாங்கியதும் சினிமா பார்ப்பது அதிகமானது, மேல்நிலை படிப்பு சென்றதும் கொஞ்சம் கொஞ்சமாக பாடல்கள் கேட்பது விருப்பமான ஒன்றாக மாறியது.அந்த கால கட்டங்களில் பல நாட்கள் பள்ளியை கட் செய்துவிட்டு பல சினிமாக்கள் சென்றதுண்டு. ஆனாலும் பாடலாசிரியர் , இசையமைப்பாளர், இயக்குனர் போன்ற விஷயங்கள் கவனிப்பதில் எனக்கு ஆர்வம இருந்ததில்லை, ஆர்வம இருந்ததில்லை என்பதை விட தெரிந்ததில்லை. கல்லூரி சென்ற பிறகு பல நண்பர்கள் தொடர்பு, வெளி உலக அனுபவங்கள், கணினி, இணையம் போன்றவை சினிமா பற்றிய எனது பார்வையை மாற்றிவிட்டன.

எனக்கு ஆங்கில படங்கள் பார்ப்பது பிடிக்கும் அவர்களின் விசுவல், கிரியேடிவ் காரணமாக அவை எனக்கு பிடித்து விட்டன. நான முதன் முதல் பார்த்த ஆங்கில படம் டைட்டானிக். நான் பார்த்த முதல் ஹிந்தி படம் ஷாருக்கின் பாஷா. இன்று நான் சினிமா பார்ப்பது குறைந்து விட்டது. இருந்தாலும் சினிமாக்களை பற்றி ப்ளாக்கில் அறிந்து கொள்கிறேன். உலக சினிமாக்கள் பற்றி தெரியாத நான் ஜாக்கி, மற்றும் பட்டர்பிளை சூர்யா அவர்களின் வலைப்பூக்களின் மூலம் அவற்றை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இன்னும் சினிமாக்களின் பல முகங்கள் நான் அறிந்திராதாவை. முடிந்தவரை அறிந்து கொள்கிறேன்.
------------------------------------------------------------------------------------------


டிஸ்கி:
இந்த பதிவு என்னோட சினிமா அனுபவங்கள்தான். வேறு ஒன்றும் பெரிதாக தெரியாது . ஒரு சினிமா ரசிகன் மட்டுமே நான்.

1 comments:

என்னதான் நடக்குது இங்க?

" ஆரம்பத்தில் இருந்தே ஊழலை ஒழிப்பேன் என்று கூறியவர் எங்கள் தலைவர் விஜயகாந்த்"
- பிரேமலதா விஜயகாந்த்
" ஊழல் ஒழிப்பதற்கு தான் இந்த ரத யாத்திரை " - அத்வானி
" லோக்பால் மசோதா நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் " -
" ஊழலிற்கு எதிராக பாத யாத்திரை தொடங்கினார்" - பாபா ராம் தேவ்

இதெல்லாம் என்னனு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். இந்த ஊழல் ஒழிப்பு பத்தி இப்ப எல்லோரும் தீவிரமா பேசிட்டு இருக்காங்களே நாமளும் எதாவது பண்ணனும்னு ஆளாளுக்கு பேசிட்டு இருக்காங்க. எதுக்கு இதெல்லாம் இவ்ளோ நாளா எல்லாரும் என்ன பண்ணிட்டு இருந்தாங்க?. திடீர்னு ஏன் இவங்க இத பண்றாங்கனு ? மக்களும் திடீர்னு போராட்டம், உண்ணாவிரதம்னு இருந்தாங்க.

இத பத்தி எல்லாம் பேசும் போது இயக்குனர் .ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டில பேசும் போது சொன்னது. மக்களுக்கு பொறுமைனா என்னன்னு தெரியல, ஒரு டிராபிக் ரூல்ஸ் பாலோ பண்ண நினைப்பதில்லை, தனக்கு மட்டும்னு இருக்கற இவங்க எதுக்கு ஊழல், லோக்பால் னு பேசிட்டு இருக்காங்கனு.

இத பத்தி எல்லாம் பேசிட்டு போராட்டம்னு இருக்கறவங்க எல்லாம் அவுங்களோட சுய லாபத்திற்காக தான் பேசிட்டு இருக்காங்க. அரசியல்வாதிங்க இத அரசியலாக்கி தங்கள அடையாளபடுத்த நெனைக்கறாங்க. சில பேர் தங்கள ஹீரோ வாக காட்ட இத உபயோகபடுத்தறாங்க. ஒரு சட்டம் போட்ட மட்டும் ஊழல் ஒளிஞ்சுடும்னு நெனச்சுட்டு இருக்கறது எவ்ளோ பெரிய முட்டாள்தனம். உண்மைய சொல்லணும்னா எனக்கு அன்னா ஹசாரே யார்னு அவர் போராட்டம் நடத்த ஆரம்பிக்கற வரைக்கும் தெரியாது. அதுக்காக அவர செஞ்சது தப்புன்னு நான் சொல்ல வரல, அவருக்கு ஊழல் ஒழிக்க ஒரு கடுமையான சட்டம் வேணும் அதுக்கு நாம எதாவது பண்ணனும் தோணி இருக்கு, அது பெரிய ஆச்சர்யம் இல்ல. நம்ம நாட்டு மக்களுக்கு ஒட்டு மொத்தமா தோணுது இவ்ளோ நாள் ஏன் இவங்களுக்கு தோனலனு ஆச்சர்யம்தான்.

இத பத்தி நெறய எழுதலாம், ஆனா ஏற்கனவே நெறய எழுதிட்டாங்க. அது வேண்டாம் இப்ப நான் சொல்ல வந்தது என்னனா?
இந்த விஷயத்த உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் கூட விட மாட்டேன்கறாங்க. தங்களது பிரசுரங்களில் அன்னா ஹசாரே போட்டோ போட்டு சுயேட்சை வேட்பாளர்கள் அடையாளபடுத்த நினைக்கறாங்க. தங்களோட சுய விளம்பரத்திற்காக அரசியல்வாதிகள் இப்போது உபயோகபடுத்தும் பகடைதான் "ஊழல் எதிர்ப்பு " என்கின்ற ஒன்று.
இவ்ளோ நாளா தோணாத ஒரு விஷயம் அன்னா ஹசாரே போராட்டம் ஆரம்பிச்ச உடனே தான் எல்லோருக்கும் தோணுது .
ஒரு கடையில எம்.ஆர்.பி க்கு மேல பொருள் விற்பதை கேக்க துணிச்சல் இல்லாத மக்கள், எப்படி ஊழலுக்கு எதிரா போரடுவாங்க.
ஒருத்தன் ஒன்னு செய்யறான், அது எதுக்குன்னு யோசிக்காம ஆட்டு மந்தை மாதிரி அவன் செய்யறது செஞ்சுட்டு, அப்பறம் வேற ஒன்னு செய்யும் போது இத மறந்துட்டு அதை செய்வாங்க.
அதை எல்லாம் விட்டுட்டு இனியாவது திருந்துங்க மக்களே..........

0 comments:

ரசிகர்கள் Vs ரசிகர்கள்

"இன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள் போல் முட்டாள்கள் எங்கும் பார்க்க முடியுமா என்பது எனக்கு கொஞ்சம் சந்தேகம் உள்ளது."
"எதுக்குயா இப்படி சொல்ற? அவங்கள பத்தி என்ன நெனச்ச ? என்னவெல்லாம் பண்றாங்க தெரியுமா மன்றம் மூலம் எவ்ளோ பண்றாங்க, நடிகைகளுக்கு கோவில் கட்ராங்க, கட் அவுட்டு வைக்கறாங்க, பால் குடம் எடுக்கறாங்க, பால் அபிசேகம் பண்றாங்க படம் ரிலீஸ் ஆனா உடன் டிக்கெட் எவ்ளோ ரூபாய் கொடுத்தும் படம் பாக்கறாங்க. அப்படி பட்டவங்கள முட்டாள்னு சொல்றியே "

"கொஞ்சம் இருங்க நான் சொல்ல வந்தத சொல்றேன். நீங்க சொல்றத பத்தி சொல்ல நான் சொல்ல வரல"

"என்ன சொல்ல வந்தியோ சொல்லிதொல"

பொழுதுபோக்கின் ஒரு அம்சம் தான் சினிமா. நானும் சினிமா பார்ப்பவன் தான், சினிமாவாக மட்டும் பார்ப்பவன். அதில் குறைகள், குற்றங்கள் இருக்கும். அதனால் யாரும் சினிமாவை வெறுப்பதில்லை. ஆனால் பாவம் அதனை சார்ந்தவர்கள் தான், குறிப்பாக நடிகர்கள் நிலைமை கொஞ்சம் திண்டாட்டம் தான். அவரின் படம் வெற்றி பெற்றால் கொண்டடபடுகிறார்கள். தோல்வி அடைந்தால் இழிவு படுத்தபடுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் அல்ல விளையாட்டிலும் நடக்கிறது.
அதிலும் குறிப்பாக தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு அவர்களின் நிலமையோ ரொம்ப மோசம். எஸ்.எம்.எஸ் களில், பேஸ்புக், ட்விட்டர் போன்றவை மூலம் அவர்கள் மிக மோசமாக இழிவுபடுத்தபடுகிறார்கள். தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை இழிவு செய்வது என்பது மனிதன் செயல் அல்ல. அவர்களும் மனுசங்க என்பதை மக்கள் உணரவில்லை. அவர்களை இழிவுபடுத்துவதால் அவங்களுக்கு கெடைப்பது என்னனுதன் தெரியல. ஒரு பெரிய நடிகரின் ரசிகர்கள் இன்னொரு பெரிய நடிகரை கேவலமாக சித்தரிப்பது, அவர்கள் இவரை கேவல்படுதுவது என தொடர்கிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்க இதையும் ஒரு வேலையா செய்றவங்கள பாத்தா எனக்கு கடுப்புதான் ஆகுது. இனியும் இவங்க திருந்துவங்காளானு தெரியல?
-------------------------------------------------------------------------------------

இத பத்தி இங்க எழுத காரணம் சில பல மாதங்கலாவே நடிகர்களை இழிவு செய்து,
எஸ்.எம்.எஸ் லயும், பேஸ்புக் லயும் அப்டேட்ஸ் கடுப்பேத்திடே இருந்துச்சு. அதான் அதை பத்தி இங்க பதிவு போடுறேன்.

0 comments:

மயக்கம் என்ன - ஏழாம் அறிவு- வேலாயுதம்-

தீபாவளிக்கு வெளிவரபோவதாக சொல்லப்படும் இந்த மூன்று படங்களின் பாடல்கள் எப்படி இருக்குது?.நாமளும் கொஞ்சம் அலசுவோம்.
இருக்கற பிரச்சனைல இது இப்ப தேவையானு. நீங்கா கேக்கறது தெரியுது. என்ன பண்றது, இப்போதைக்கு ஒரு படம் கூட பாக்கல. பாத்து இருந்த அதை பத்தி எழுதி இம்சை பண்ணி இருப்பேன். அதனால பாட்டுகள பற்றியும் எழுதலாமேன்னு இந்த பதிவு

மயக்கம் என்ன?
தற்போது ஹிட் லிஸ்டில் இடம்பிடித்து பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறது. தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தின் பாடல்கள். இசையமைத்து இருப்பவர் - ஜி.வி. பிரகாஷ்குமார். படத்தோட டைரக்டர் தனுஷோட அண்ணன் தான்.படத்துல செல்வராகவன், தனுஷ் ரெண்டு பேருமே பாட்டும் எழுதி பாடியும் இருக்கறாங்க. "ஓட ஓட தூரம் கொரையாள " எதார்த்தமான பாடல் வரிகளோடு தனுஷ் குரலில் கேட்க மிக நன்றாகவே உள்ளது. "காதல் என் காதல் " பாடலும் இப்போது செம ஹிட். இந்த பாட்டுல தனுஷ் பாடும்
" வெட்ரா அவள, கொல்றா அவள, தேவையே இல்ல " வரிகள் தான் இப்போது இளைஞர்களின் விருப்பமான வரிகள். எனக்கும் இந்த ரெண்டும் பிடிச்சு போச்சு.
அது மட்டும் இல்லாம ட்ரைலர் ல கொஞ்சம் நம்மை கவர்கிறார்கள்.. தீபாவளிக்கு விஜய், சூர்யாவுக்கு தனுஷ் சரியான போட்டியா இருக்க போகிறார்.


ஏழாம் அறிவு
சூர்யா - ஸ்ருதிஹாசன் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள படம். முருகதாஸ் படம் என்பதால் ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
இந்த படத்திற்கு இசை- ஹாரிஸ்ஜெயராஜ்.
ஆனால் மயக்கம் என்ன? கொடுத்த இம்பாக்டை, ஏழாம் அறிவு பாடல்கள் கொடுக்க வில்லை .. ஹரிஷ் ஜெயராஜ் வழக்கம் போல பழைய ட்யூன்களையே தந்து இருப்பது கடுபெற்றுகிறது. ஒரே பாடல் எஸ்.பி.பி பாடியுள்ள " யம்மா யம்மா காதல் பொன்னம்மா " பாடல் மட்டும் ரசிக்கும்படியாக உள்ளது. சூர்யாவின் வித்தியாச கெட்டப்கள்,ஏ.ஆர். முருகதாஸ் இயக்கம் என ரசிகர்களின் ஹீர்பீட்டை இப்போதே எகிரவைதுள்ள படம்.



வேலாயுதம்
நமது இளைய தளபதி நடித்து இருக்கும் படம். தொடர் தோல்விகளால் நொந்து இருக்கும் விஜய் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்து இருக்கும் படம். படத்தின் இயக்குனர் -ராஜா(ஜெயம் , எம்.குமரன், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி போன்ற தெலுங்கு ரீமேக் படம்களை தனது தம்பியை வைத்து மட்டும் இயக்கியவர்). தற்போது சொந்த கதையில் முதல் முறையாக விஜய்யை வைத்து இயக்குகிறார்.
படத்திற்கு இசை -விஜய் ஆன்டனி,
இதிலும் வழக்கம் போல் விஜய் அறிமுக பாடல் "சொன்னா புரியாது" , கடுபேற்றுகிறது, சங்கீதா ராஜேந்திரன் குரலில் " மாயம் செய்தாயோ " பாடல் பளிச். மற்றொரு பாடல் "மொளச்சு மூணு இலைய விடல பாடல் " காய்கறிகள் வாசனையுடன் கேட்க இனிமையான மெலடி.
மற்றபடி மற்றவை வழக்கம் போல்.




0 comments:

நான் ரசித்த பாடல்கள்- வெண்ணிலா கபடி குழு

நான் எவ்வளவோ பாடல்களை கேட்டு இருக்கிறேன். "மன்னிக்கவும், நாம் கேட்டு இருப்போம்", அவற்றில் சில பாடல்கள் மட்டும் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும் அப்படி எனக்கு பிடித்த பாடல் தான் வெண்ணிலா கபடி குழு பட பாடல்கள் . இதை நான் இப்போது இங்கே எழுதுகிறேன் என்றால் இன்று இந்த படத்தை சன் டிவியில் இன்று மீண்டும் பார்த்தேன். விஷ்ணு - சரண்யா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காகவே எவ்வளவு முறை வேண்டுமானாலும் பார்ப்பேன். ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் சரண்யாவின் எக்ஸ்பிரசன்ஸ் சான்சே இல்லை.

இந்த படத்தின் இசையமைப்பாளர் செல்வகணேஷ், அவருக்கு இது முதல் படம். முதல் படத்திலேயே பாடலிலும் சரி பின்னணி இசையிலும் சரி பின்னி எடுத்து இருக்கிறார். காதல் காட்சிகளில் வரும் அழகான பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்தமானது. இப்படம் வெளிவரும் முன்பே ஹிட்டடித்த பாடல் "லேசா பறக்குது மனசு" கார்த்திக் - சின்மயி இன் குரல்களில் இனிமையான மெலடியில் மனதை வருடுகிறது. கார்த்திக்கின் குரலில் மற்றொரு பாடலான "பட பட வென " பாடல் அந்த அளவிற்கு மெலோடியாக இல்லை என்றலும் கேட்கும்போது இனிமை. ஹரிசரண் குரலில் "உயிரில் ஏதோ " பாடல் காதல் பிரிவை காட்டும் சூப்பர் மெலடி.

மெலடி பாடல்கள் எப்போதும் எனது சாய்ஸ். அதனால்தான் இந்த படத்தில் வந்த மூன்று பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
-------------------------------------------------------------------------------

0 comments:

எனது புத்தக அனுபவங்கள்

எனக்கு புத்தகங்கள் படிப்பது என்றால் அலாதி பிரியம், நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் நான் விரும்பி படித்தவை காமிக்ஸ் புத்தகங்கள், விக்ரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்ற கதைகள் படித்து வந்தேன்.ஆனாலும் காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதில் தான் எனக்கு விருப்பம் அதிகம். அதில் வரும் படத்துடன் கூடிய கதைகளை படிப்பதில் ஒரு தனி பிரியம், அதிலும் மாயாவி, கரும்புலி, கௌபாய், ஜேம்ஸ்பாண்ட் போன்ற கதைகள் மிக பிடித்தவை. காமிக்ஸ் புத்தகங்கள் யார் வீட்டில் உள்ளது என்று தேடி பிடித்து படித்து எப்படியாவது படித்து விடுவேன்.

பின்பு தினசரிகளில் வார வாரம் வரும் இணைப்பு புத்தகங்கள், ஆனந்தவிகடன், குமுதம் போன்றவைகளும் படிப்பேன். இத்தனையும் நான் படிப்பது நண்பர்கள், உறவினர்களிடம் வாங்கி வந்துதான். ஒரு முறை நண்பன் ஒருவனின் துணையுடன் நூலகத்தில் இணைந்து புத்தகங்கள் படித்து வந்தேன். அந்த நூலகம் நான் படிக்கும் பள்ளியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. மாலை பள்ளி முடிந்தவுடன் தான் நூலகம் செல்ல இயலும்.ஆனால் அந்த நூலகர் நான்கு மணிக்கே கிளம்பிவிடுவார், பள்ளி நான்கு மணிக்கு தான் முடியும். நூலகத்தில் எப்படியாவது புத்தகம் எடுத்து விடவேண்டும் என்று சைக்கிளில் எவ்வளவு வேகம் செல்லமுடியுமோ அவ்வளவு வேகம் செல்வோம். அப்படியும் பல நாட்கள் ஏமாற்றம் தான். இப்படியாக நூலகத்தின் மூலம் தெனாலிராமன், பீர்பால், முல்லா போன்ற கதைகள் பரிச்சயமானது.

நாவல் என்றால் நான் முதலில் படித்து வந்தது ராஜேஷ்குமார் நாவல் தான், அவரது கதைகளின் ஓட்டமும் புத்திசாலிதனமான துப்பறிதலும் நாவலை முடிக்காமல் கீழ் வைக்கவிடாது. பள்ளி காலங்களில் நான் அறிந்த சில எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,, சுஜாதா, வைரமுத்து, பட்டுகோட்டை பிரபாகர்,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஒரு சிலரே, இவர்களும் நான் வார இதழ்கள் படித்து வந்ததால் தான் பரிச்சயம்.

மேல்நிலை, கல்லூரி என பின் வந்த காலங்களில் பல புத்தகங்கள் படிக்கும்
வாய்ப்புகள் கிடைத்தது. கலைஞர் அவர்கள் எழுதிய பொன்னர் - சங்கர் தான் நான் படித்த
பெரிய வரலாற்று நாவலாகும்.நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எனது வாசிப்பு
கல்லூரி நூலகம்,அரசு நூலகம் என தொடர்ந்தத்து. கவிதைகளை பள்ளி பருவத்தில்
விரும்பி படித்து இல்லை, பின்பு நான் மிகவும் விரும்பி படித்தது கவிதைகள் தான்,
வைரமுத்து அவர்களின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானது,ஆனாலும் நான்
விரும்பும் மற்றொரு கவிஞர் தபூசங்கர். அவரது ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர் தான்
என்னை அவரை, கவிதைகளை பிடிக்கவைத்தது, அவரது கவிதை தொகுப்புகள் சில படித்து
உள்ளேன். கவிதைகள் ஒவ்வொன்றும் காதலை இயல்பாக, புதுமையாக, எடுத்து கூறின.
அதனால் தான் என்னவோ அவரது கவிதைகள் என்னை கவர்ந்துவிட்டன.
அவரின் ஒரு கவிதை இங்கே
"உப்பைக் கொட்டியவர்கள்கூட
அள்ளிக்கொண்டு போகிறார்கள்
ஆனால் நீயோ உன்
உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு
அலட்சியமாய்ப் போகிறாயே"

அவரது ப்ளாக் இங்கே கிளிக்கவும்
ஆனாலும் புத்தகங்களுடன் எனது அனுபவம் என்பது மிக, மிக குறைவு. இன்னும் பல புதகங்ககளை தேடுகிறேன், தேடிக்கொண்டு இருக்கிறேன்.
---------------------------------------------------------------------------------

டிஸ்கி:
இந்த பதிவை ஒரே மூச்சில் எழுதவேண்டும் என்று நேற்று எழுத ஆரம்பித்து நான்கு முறை மின்வெட்டு ஆனது. புத்தகங்கள் பற்றி நிறைய எழுத யோசித்து இருந்தேன், விட்டு விட்டு எழுதியதால் முழுவதுமாக எழுத பல விஷயங்கள் ஞாபகம் வரவில்லை.
மீண்டும் மின்வெட்டை அமல்படுத்திவிட்டனர்.

0 comments:

பாரதியார் - இணையற்ற கவிஞன்

என்னங்க பண்றது நானும் எத எழுதுறதுனு ஒசிச்சு பார்த்தேன் ஒன்னும் புலப்படல. சரி பாரதியார் டக்குனு ஞாபகத்துக்கு வந்தாரு,. சரி அவர எனக்கு ரொம்ப பிடிக்குமே, அவர பத்தி ஒரு பதிவாவது போடணும்னு தோணுச்சு. அதனால இந்த ப்ளாக்கில் அவர பத்தி பதிவு போடலனா நல்லா இருக்காதுனு இத எழுதறேன். யார் இத படிச்சாலும் தவறுகள் இருக்கும் பட்சத்தில் மன்னிக்கவும்.
--------------------------------------------------------------------------------
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவிஞரான பாரதியார் நான் மிகவும் விரும்பும் ஒருவர்,தனக்கே உரிய பானியில், நடையில், எவரைக் கண்டும் அஞ்சாமல் கவிதைகளை அள்ளி வீசியவர், இவரது அஞ்சாமை உணர்வு என்னை மிகவும் கவர வைத்தது. சில கவிதைவரிகளில் வீரம் நம்மை ஆட்கொள்ளும், காதல் உணர்வு நம்மை காதல் வயப்பட வைக்கும்.
தமிழ் மொழியின் பெருமையை ஒரே வரியில் சொல்கிறார் பாருங்கள் இப்படி

" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் "

இப்படி இவர் சொல்ல வேண்டுமானால் மற்ற மொழிகளில் எவ்வளவு புலமை இருக்க வேண்டும்.
இவர் தான் செய்யும் தொழில் இதுதான் என்று சொல்லும் இடம் எவ்வளவு அழகானது, இயல்பானது என்று பாருங்கள்

" எமக்கு தொழில் கவிதை செய்வது "

நான் ரசித்த மற்றொரு வரி

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா சற்றே மிதிக்கிறேன் "

மரணத்தை இவ்வளவு துணிவுடன் எதிர் கொண்ட இவரது அஞ்சா நெஞ்சம் என்னை மிகவும் கவர்ந்தது
பெண்மை, காதல், வீரம், வாழ்க்கை, நீதி, ஆன்மிகம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒரே மகாகவி பாரதி தான்.
-------------------------------------------------------------------------------
பாரதியார் பத்தி எழுதலாம்னு இதை எழுதுனேன். ஆனாலும் இன்னும் நல்லா எழுத முயற்சி செய்கிறேன்

2 comments:

நான் தவறவிட்ட எஸ்.ரா வின் கலந்துரையாடல்

நேற்று மாலை திருப்பூர் வலை பதிவர்கள் சங்கமான சேர்தளம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்து இருந்தது. நான் அவசர பணி காரணமாக கோவை சென்று விட்டதால், என்னால் அதில் கலந்து கொள்ள இயலவில்லை. நானும் எனது நண்பனும் செல்ல திட்டமிட்டோம், இறுதியில் அவன் மட்டும் சென்று வந்தான். எதிர்பார்த்த அளவு நபர்கள் விழாவிற்கு வரவில்லை என்று சொன்னான். நான் கூட பரிசல்காரனின் பதிவில் தான் தெரிந்து கொண்டேன்.
உலகின் பல இடங்களுக்கு சென்று வந்துள்ள அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக நண்பன் கூறினான். எனக்கு சிறிய வருத்தம் இன்னும் உள்ளது ஒரு அருமையான சந்தர்பத்தை இழந்து விட்டோம் என்று.

நேற்று மதியம் முதல் இன்று காலை வரை கோவையில் தான் இருந்தேன். கோவை எனக்கு பிடித்த நகரம். திருப்பூர் போல் பரபரப்பாக அல்லாமல் மிக நிதானமான நகரம், மற்றும் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை எனக்கு பிடிக்கும். மற்றபடி கோவையில் எனக்கு அனுபவம் என்று எதுவும் இல்லை எப்போதாவது செல்வதோடு சரி. எனக்கு தெரிந்தவரை லிவிங் காஸ்ட் கோவையில் கொஞ்சம் அதிகம். அந்த வகையில் திருப்பூர் எவ்வளவோ பரவாயில்லை.
-------------------------------------------------------------------------------

0 comments:

அடுத்த கட்டம்

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற போட்டி தான் நான் பார்த்த கடைசி கிரிக்கெட் போட்டி. இந்தியா இங்கிலாந்து சென்று விளையாடிய தொடரின் போட்டிகளை நான் காணவில்லை என்றாலும் செய்திகள் மூலமாக விவரங்கள் அறிந்து கொண்டேன்.
இங்கிலாந்து தொடரில் இந்தியாவின் தொடர் தோல்விகளுக்கு காரணம் பல சொல்லப்பட்டன.
ஐ.பி.எல் போட்டிகள், தொடர் போட்டிகள்,காயம், அனுபவம் இன்மை என்று. அதை பற்றி இங்கு நான் சொல்லவில்லை, நம் அணியின் அடுத்த கட்டம் என்ன?

நம் அணி, அடுத்து செய்ய போகும் செயல்பாடுகள் என்ன என்று யோசிக்கவில்லை, அதற்குள் இப்போது சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன.இந்த தொடரில் இந்திய அணிகள் வெற்றி பெறும் பட்சத்தில் பழைய தோல்விகள் மறக்கபடலாம் அல்லது விமர்சனங்கள் உருவாகலாம். எது நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பும் பி.சி.சி.ஐ தான். சிறந்த அணியை உருவாக்கும் திட்டமிடல் இல்லதுதான் இதற்கு காரணம்.

அணிக்கு வீரர்கள் தேர்வு ஐ.பி.எல் -லில் நன்றாக விளையாடும், விளையாடிய வீரர்கள் மட்டும் தேர்வு செய்ய பட்டனர். 20-20 போட்டிகள் அதிர்ஷ்டம் தான் பல வெற்றிகளை தீர்மானித்துள்ளது. அதை மட்டும் கணக்கில் கொண்டு தான் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர், ஒரு வீரர் அணியில் காயம் காரணமாக இல்லை என்றால் அவரது இடத்தை நிரப்பும் மாற்று வீரர் எவரும் இல்லை. அதனால் முழுமையாக உடல் தகுதி பெறாதவர்களை வலுக்கட்டாயமாக சேர்க்கும் நிலைதான் உள்ளது. ஒய்வு நிலையில் உள்ள வீரர்களை எதிர்பார்த்து கொண்டுதான் உள்ளோம்.
ஒரு டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் ஐ.பி.எல் -லில் விளையாடிவர்கள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாதவர்கள். உடல் தகுதி பெறாதவர்கள். இதே நிலை தான் ஒரு நாள் போட்டிகளுக்கும்.
120 கோடி மக்கள் கொண்ட நாட்டில், சிறந்த வீரர்களை கிரிக்கெட் மட்டும் அல்ல எந்த ஒரு விளையாட்டிலும் நம்மால் உருவாக்க தற்போது முடிவதில்லை. காரணம் பயிற்சி குறைவு, மற்றும் சிறந்த பயிற்சியாளர்கள் இல்லாததுதான். சீனா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் செய்யப்படும் அளவிற்கு பயிற்சிகள் இங்கு செய்யபடுவதில்லை அல்லது உக்திகள் கற்றுக்கொள்ள படுவதில்லை.
ஒலிம்பிக் ஆகட்டும், டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம், கால்பந்து, ஹாக்கி உலககோப்பை ஆகட்டும் நாம் வெற்றி பெறுவோமா என்ற எண்ணம தான் உள்ளதே தவிர, நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நிலை இல்லை. திறமையானவர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கான உக்குவிப்புகள் இல்லாததும் காரணமாக இருக்கலாம். திறமையானவர்களை கண்டு அவர்களை உக்குவித்து முறையான, புதிய உக்திகளுடனான பயிற்சி தரும்போது நாம் பல வீரர்களை உருவாக்க முடியும்.

பி.சி.சி.ஐ தனது வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் வரையும் கார்பரேட் கம்பெனிகளின் கீழ் அடமானத்தில் உள்ள வீரர்கள் நாட்டிற்காக விளையாடும் வரையும் இந்திய அணி சிறந்த அணியாக உருவாகாது .



டிஸ்கி: கிரிக்கெட் எனக்கு பிடிக்கும் என்பதால் தான் இதை எழுதினேன். தவிர மற்ற விளையாட்டுகளிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.

0 comments:

நான் வாசித்த முதல் ப்ளாக்

இங்கு எனது ப்ளாக் அனுபவம் பற்றி குறிப்பிடும் முன்னர், என்னுடைய இன்டர்நெட் அனுபவங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
நான் பதினோராம் வகுப்பில் வரலாறு பாட பிரிவில் படித்த காரணத்தால், எனது கணினி அறிவு அப்போது பூஜ்யம் தான். கணினி படத்தில் படிக்கும் என் நண்பர்கள் இன்டர்நெட், ஈமெயில் பற்றி பேசும் போதெல்லாம், அவர்கள் சொல்வது ஒன்றும் புரியாது. என்னடா பெரிய கம்ப்யூட்டர்னு. அவங்க லேப்ல போய், காதலர்தினம் படத்துல கவுண்டமணி மாதிரி கிண்டல் பண்ணிட்டு வந்துடுவோம்.
அப்பறம் +2 எக்ஸாம் முடிஞ்சு, காலேஜ் போறவரைக்கும் கம்ப்யூட்டர் கிளாஸ் போவோமே, அப்டினு போனேன். அங்க கொஞ்ச விஷயங்கள் கத்துகிட்டேன். ஆனாலும் இன்டர்நெட் பத்தி ஒன்னும் கத்துதரல(ஏன்னா அங்க இன்டர்நெட் இல்ல). சரி கம்ப்யூட்டர் பத்தி கத்துடோம் இனி கவலை இல்லன்னு. பி.சி.ஏ கோர்ஸ் எடுத்தேன். அப்பறம் தான் தோனுச்சு ஏன்டா எடுத்தோமுனு, ஏன்னா ப்ரோக்ராம், சாப்ட்வேர் அப்படிங்கற வார்த்தையவே அப்பதான் கேள்விபட்டேன். பேசாம பி.காம், பி.பி.எம் எடுத்து இருக்கலாமேனு தோணுச்சு. சரி என்ன ஆனாலும் இத கத்துக்கணும்னு முடிவு எடுத்தேன்.
அப்பறம் எங்க லெக்சரர் கேட்டாங்க இங்க யார்க்கு ஈமெயில் ஐடி இருக்குனு. நைசா பின்னாடி திரும்பி பாத்தேன் எத்தன பேருக்கு இருக்குனு. அப்புறம் என்னோட சந்தோசத்துக்கு அளவே இல்ல. ஏன்னா ஒருத்தன் தான் கைய தூக்கி இருந்தான். ஆஹா எல்லாரும் என்னைய
போலத்தான் போலன்னு தான் சந்தோசம். அப்புறம் ஒரு வருத்தம் என்னன்னா கைய தூக்குனவன் ஹீரோ ஆயிட்டான்(காரணம் சொல்லி தெரிய வேண்டியதில்லை).
காலேஜ் லேப்ல முதல் நாள் இன்டர்நெட் அட்ரஸ் பார்ல நான் டைப் பண்ணுன முதல் வெப்சைட் யாஹூ தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இன்டர்நெட் உபயோகத்த தெரிஞ்சுகிட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு தான் கூகிள் சர்ச் இன்ஜின், ஜிமெயில், சாட்டிங் என எந்த இன்டெர்நெட் அறிவு கொஞ்சம் விரிவடைஞ்சது. வெறும் ஈமெயில் மட்டும் தான் அனுப்பலாம்னு நெனச்ச நான் இன்டர்நெட் பத்தி நெறய தெரிஞ்சுக்க விடுமுறை நாட்களில் கல்லூரி லேபை முழுமையா உபயோகபத்தி கிட்டேன்.

ப்ளாக் அறிமுகம்:
நான் இன்டர்நெட் தொடர்ந்து உபயோகபடுத்தி வந்தாலும் ப்ளாக் பத்தி ஓரளவுக்கு தெரியும். ஆனா தமிழ் ப்ளாக் படிச்சதில்ல. ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஆனந்தவிகடனில் கேபிள்சங்கர் அவர்களின் ப்ளாக் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அவரது ப்ளாக் தான் நான் வாசித்த முதல் வலைப்பூ, அப்போது இருந்து இன்று வரை பல ப்ளாக்குகள் வாசித்து வருகிறேன். பின்பு தான் ஜாக்கிசேகர், பரிசல்காரன், கருந்தேள் இன்னும் பல பிளாக்கர்கள் வலைத்தளம் அறிந்து கொண்டேன்.



நான் இன்னைக்கு இந்த ப்ளாக் எழுதறேன்னா அதுக்கு அன்னைக்கு ஆனந்தவிகடன்-ல கேபிள்சங்கர் அவர அறிமுக படுத்தியதுதான். எனவே இந்த நேரத்துல ஆனந்தவிகடனுக்கு என்னோட நன்றிய தெரிவிச்சுகறேன்.

3 comments:

ST கொரிய,ர் ஒரு துன்பியல் அனுபவம்

கடந்த வாரம் இணையம மூலமாக PENDRIVE ஒன்று ஆர்டர் செய்தேன்..
மூன்று நாட்களில் டெலிவரி செய்து விடுவோம் என்று சொன்னார்கள். பின்பு மூன்ற நாள் கழித்து குன்னத்தூர் ST COURIER இல் இருந்து அழைத்தார்கள். உங்களுக்கு கொரியர் வந்துள்ளது வந்து வாங்கிகங்கனு, நான் பதிலுக்கு "ஏங்க ஊத்துக்குளில இருக்கற நான் எப்படி பதினைந்து கிலோ மீட்டர் வந்து வாங்கறது. நீங்க எப்படியாவது அனுப்புங்க"னு சொல்லிட்டேன்.
அப்பறம் ரெண்டு நாள் ஆகியும் கொரியர் வரல. சரி என்ன ஆச்சுனு குன்னத்தூர் ஆபீஸ்க்கு போன் பண்ணி கேட்டா "அது அந்த அன்னைக்கே ஹெட் ஆபீஸ் திருப்பி அனுபிட்டோம், வந்துருமுனு சொன்னாங்க, அதுக்கு ரெண்டு நாள் ஆச்சு இனி எப்ப வரும் கேட்டா "நாங்க திருப்பி அனுபிட்டோம் எங்களுக்கு தெரியாது"-னு சொல்லிட்டாங்க, என்னடா இது ஆன்லைன ஆர்டர் பண்ணி வம்பா போச்சேனு PENDRIVE ஆர்டர் செஞ்ச கம்பெனிக்கு கால் பண்ணேன் (நல்லவேல அது டோல்-ப்ரீ நம்பர்). அவங்க கொரியர் புக்கிங் நம்பர் தந்தாங்க.
அத வச்சு ST COURIER வெப்சைட்ல டிரேக் பண்ணுனா, அது திருப்பூர் ஆபீஸ் வந்து மூணு நாள் ஆகுதுன்னு காட்டுது. சரின்னு திருப்பூர் ஆபீஸ்க்கு கால் பண்ணி கேட்டா. கொரியர் புக்கிங் நம்பர், பேரு, அட்ரஸ் சொல்லுங்க பாத்துட்டு கால் பண்றோம் அப்படின்னு சொல்லிட்டு போன கட் பண்ணினதுதான் அப்புறம் எடுக்கவே இல்ல.
அடுத்த நாள் போன் பண்ணி சத்தம் போட்டேன், அதுக்கு ஒரு ரீசன் சொன்னாங்க பாருங்க,
சாரி சார், அட்ரஸ் அழிஞ்சுபோச்சு, உங்க அட்ரஸ் சொல்லுங்க, நாளைக்கு டெலிவரி செய்து விடுவோம் என்று சொன்னார்கள். சரினு விட்டுட்டேன்.
அந்த அன்னைக்கு சாய்ங்காலம் திருப்பூர் போக வேண்டி இருந்ததால, கொரியர் கையோட வாங்கிட்டு வந்தர்லாம்னு வாங்கிட்டு கொஞ்சம் அட்வைஸ் பண்ணிட்டு வரவேண்டியதா போச்சு..

ஒரு பொருள வாங்கிட்டு ஒரு வாரம் நான் பட்ட அவஸ்த இருக்கே அய்யய்யோ னு..
சந்தானம் தான் ஞாபகம் வர்றார்

0 comments:

எங்கேயும் எப்போதும் - தமிழ் சினிமாவின் மற்றொரு அடையாளம்

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்து உள்ள படம்தான் எங்கேயும் எப்போதும்...
ஒரு படத்தின் திரைக்கதை என்பது, படம் பார்க்க வருபவரை படத்தின் உள்ளே இழுத்து அதன் உடன் பயணிக்க வேண்டும், அந்த முயற்சியில் புதுமுக இயக்குனர் சரவணன் வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்...
இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்...




எங்கேயும் எப்போதும் படத்தின் கதை என்ன ?

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தும் மோதிக்கொள்கின்றன.
திருச்சியில் இருந்து செல்லும் அரசு பேருந்தில் ஜெய், அஞ்சலி , சரவ் வும்
அதேபோல் சென்னையில் இருந்து செல்லும் பேருந்தில் அனன்யாவும் பயணம் செய்கிறார்கள்.. யார் இவர்கள்? இவர்களின் பின்னணி என்ன? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலமாக சொல்லி இருக்கிறார்கள்...



பிளாஷ் பேக்கில் வரும் சரவ் - அனன்யா காட்சிகளும், ஜெய் - அஞ்சலி காதல் காட்சிகளும்
மிக அருமையாக காட்சிப்படுத்தி உள்ளனர்.
ஜெய் இன்னோசென்ட் கேரக்டரில் அழகாக பொருந்துகிறார் அஞ்சலி கொஞ்சம் துடுக்கான கதாபத்திரத்தில் எல்லோர் மனதையும் கவர்கிறார், சரவ் - ன், சென்னை வாலிபராகவும்,
அனன்யா கிராமத்து பெண் வேடத்திலும ரசிக்க வைக்கின்றனர்.
படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் சத்யா. இவர்கள் இருவரும் படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் மிகை இல்லை..

இரண்டரை மணி நேரம் ஒரு விறுவிறுப்பான திரைக்கதை மூலம் ஒரு விழிப்புணர்வு எற்படுத்தியுள்ளார் இயக்குனர் சரவணன்.. வாழ்த்துக்கள்

இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் மட்டும் பார்கவும்..
Don't Miss the Travel..

4 comments:

பிள்ளையார் சுழி

எப்படியோ ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சு.. ஆனா என்னத்த எழுதறது.. ரெண்டு நாளா
பென்சில தலைல சொறிஞ்சுட்டு யோசிச்சா ஒண்ணுமே எழுத தோண மாட்டேங்குது...
அட ப்ளாக் எழுத பென்சில் எதுக்கு எடுத்தனு நீங்க கேக்கறது தெரியுது.... ஸ்கூல் படிக்கறப்ப இருந்து எக்ஸாம் எழுதும் போது.. மண்டைல சொறிஞ்சு.. எதையாவது தோணறது எழுதுவோம்ல.. அது மாதிரி தாங்க
மறுபடியும் பென்சில் எடுக்க வேண்டியதா போச்சு..
ஆனாலும் பாருங்க ஒண்ணுமே தோண மாட்டேங்குது....

அப்பறம் எதை தொடங்குனாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவாங்க.. அதனால ஒரு சென்டிமென்டா.. இந்த டைட்டில்...

அப்பறம் நான் எழுதறதுல குற்றம், குறை, பிழை, தவறு இருந்தா மன்னிச்சுடுங்க

3 comments: