THE AMAZING SPIDERMAN (2012)


  சூப்பர் ஹீரோ கதைகள் என்றால் உடனே சில ஹீரோக்கள் டக்கென மனதில் தோன்றுவார்கள்.  அதில் கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஹீரோக்கள் பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன். அனால் ஸ்பைடர்மேன் மட்டும் சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கு டக்கென உடனடியாய் மனதில் தோன்றுபவர். அதற்கு காரணம் அவன் மிக இயல்பான சாதாரண மாணவன்,  அவனது அப்பாவித்தனம், மற்றும் மற்ற சூப்பர் ஹீரோக்களிடம் இல்லாத தனித்துவமான சிலந்திதன்மை. அகவே ஸ்பைடர்மேன் மிக எளிதாக எல்லோரையும் கவர்ந்துவிட்டார்.  மற்ற சூப்பர் ஹீரோக்களை போல் அல்லாமல் எடுத்த எடுப்பிலேயே வசூலில் பட்டையை கிளப்பியவர்  ஸ்பைடர்மேன்.

  இந்த  ஸ்பைடர்மேன் இதற்கு முன் வந்த பாகங்களின் தொடர்ச்சி அல்ல.  ஸ்பைடர்மேனின் சிறுவயது முதல் நடந்தவற்றை  UNTOLD STORY என்று இதனை படமாக்கி இருக்கிறார்கள். இதற்க்கு முன் வந்த  ஸ்பைடர்மேன் பாகங்கள் பார்த்தவர்களுக்கு இந்த அமேசிங் ஸ்பைடர்மேன் எளிதாக புரியும்.

அமேசிங் ஸ்பைடர்மேன் படத்தின் கதை என்ன?

கதை பீட்டர் பார்கரின் ஐந்து வயதில் தொடங்குகிறது. பீட்டரின் தந்தை ரிச்சர்ட் பார்க்கரும் தன் ஒரு கையினை இழந்த அவரது நண்பர் Dr.கர்ட் கான்னர்ஸ்-ம் பல்லிகள் வாலை இழந்தால் மீண்டும் வளர்வது போல. மனிதர்களுக்கும் தங்கள் உறுப்புகளை இழந்தால் மீண்டும் உறுப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். ஏனோ காரணத்தால் ரிச்சர்ட் பார்க்கர் ஆராய்ச்சி குறிப்புகளை மறைத்துவிட்டு தனது தம்பி பென் பார்க்கரின் வீட்டில் பீட்டரை விட்டுவிட்டு மனைவியுடன் செல்கின்றர். சில நாட்களில் விமான விபத்தில் பீட்டரின் தந்தை ரிச்சர்ட் பார்க்கரும் அவரது மனைவியும் இறந்து விட்டனர் எனத்தகவல் கிடைக்கிறது. அதன் பின் பென்னின் வீட்டிலேயே வளர்கிறான் பீட்டர். அறிவியல் மாணவனான பீட்டர் தனது தந்தையை பற்றி தெரிந்து கொள்ள முற்படுகையில், தனது தந்தையின் ஆராய்ச்சி குறிப்புகளை பற்றி அறிந்து கொள்ள நேரிடுகிறது . இந்த விசயத்துடன் கர்ட் கான்னர்ஸ் பற்றியும் அறிந்து கொள்கிறான். அவரை சந்திப்பதற்காக அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் ஆஸ்கார்ப் நிறுவனத்திற்கு வருகிறான். அங்கு அவர் செயற்கையாக மனிதனுக்கு உடல் பாகங்கள் வளரும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டு இருக்கிறார். அங்கு அவரை சந்தித்து தான் ரிச்சர்ட் பார்க்கரின் மகன் என்று அறிமுகபடுத்தி கொள்கிறான். அங்குள்ள ஆராய்ச்சி கூடத்தில் உள்ள சிலந்தி அவனை கடித்து விடுகிறது. அது கடித்ததின் விளைவாக அவனுக்கு சில விசேச திறமைகள் வருகிறது.

அதனை அறிந்து அதற்கேற்ப தன்னை மெருகேற்றி கொள்கிறான் .இந்நிலையில் பென் பார்க்கர் திருடன் ஒருவனால் கொல்லபடுகிறார். அவனை கண்டு பிடித்து பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுகையில் பீட்டர் ஸ்பைடர்மேனாக மாறுகிறான். எளிதில் அறுந்து விடாத செயற்கை வலை ஒன்றை அவனுக்காக உருவாக்கி கொள்கிறான். தனக்கிருக்கும் விசேச திறமை மூலம் அவன் நகரின் குற்றங்களை தடுக்கிறான். அனால் அவன் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறான் என்று போலீஸ் அவனை தேடுகிறது. இதற்கிடையில் பள்ளியில் தனது தோழியான க்வென் ஸ்டேஸியுடன் காதல் கொள்கிறான் .க்வென் ஸ்டேஸி ஸ்பைடர்மேனை தேடும் போலீஸ் அதிகாரியின் மகள். இந்நிலையில் பீட்டர் கர்ட் கான்னர்ஸ் ஐ சந்தித்து அவரது ஆராய்ச்சிக்கு உதவுகிறான். அவரது சோதனை முடியும் முன்பே கர்ட் கான்னர்ஸ் ஆஸ்கார்பபிலிருந்து வெளியேற்றப்படுகிறார். தன் ஆராய்ச்சியினை கொண்டு தன் கையினையே சோதிக்கிறார், ஆனால் தவறான பார்முலாவால் அவர் ராட்சத பல்லியாக மாறிவிடுகிறார். அதன் பின் அவரை போலவே எல்லா மனிதர்களையும் மாற்ற முயல்கிறார்... இதற்கு பின் ஸ்பைடர்மேன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார்.? கர்ட் கான்னர்ஸ் ஐ எப்படி பழைய நிலைமைக்கு கொண்டு வருகிறார் என்பதை வெண்திரையில் காண்க..... ஆரம்பம் முதலே மிக மெதுவாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.. தெளிவான டிடைலிங் கதையை நமக்கு சொல்ல முயன்று வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆரம்பம் முதல் ஸ்பைடர்மேன் சாகசங்களை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு இது ஏமாற்றமே... ஸ்பைடர்மேன் கதையில் வரும் வில்லன்கள் அப்படி ஒன்றும் பெரிதாக இம்ப்ரெஸ் செய்துவிடுவதில்லை... அந்தவகையில் இந்த வில்லனும் எடுபடவில்லை..ஆனால் இந்த படம் ஸ்பைடர்மேன் உருவான கதையின் அடிப்படை என்பதால்.. இனி வரபோகும் பாகங்களில் நல்ல ஆக்சனை எதிர்பார்க்கலாம்... இந்த படங்களை பற்றிய மேலும் விபரங்களுக்கு பின்வரும் லிங்குகளை கிளிக்கவும்

The Amazing Spider-Man (2012) - English
The Amazing Spider-Man reboot
இந்த படத்தை 3D யில் பார்த்தேன் அதிகமான காட்சிகளில் பேசிக்கொண்டே இருப்பதால் 2D யிலேயே பார்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. சில காட்சிகளே இருந்தாலும் 3D காட்சிகள் நன்றாகவே உள்ளது.படம் எனக்கு பிடித்து இருந்தது.ஏனென்றால் ஸ்பைடர்மேனை எனக்கு பிடிக்கும்

0 comments: