திருப்பூர் புத்தக கண்காட்சி - 2012
எங்க ஊருக்கு பக்கத்து ஊரான திருப்பூரில் புத்தக கண்காட்சி.. இன்று தொடங்கி பிப்ரவரி 5 வரைக்கும் நடக்கிறது.. எனவே புத்தகப்பிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொழுது போகாமல் வீட்டில் இருப்பவர்கள், ஆபிசில் இருப்பவர்கள் எல்லோரும் திரளாக வந்து புத்தக கண்காட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் கண்டிப்பாக புத்தக கண்காட்சி வருவேன். நான் வந்த அப்பறம் என்னை அடையாளம் காணும் யாரும் என்னிடம் ஆட்டோகிராப் கேட்ககூடாது என இந்த பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன். மற்றும் புத்தகங்கள் நிறைய வாங்க என்னிடம் குறைவான தொகையே இருப்பதால் வசதி உள்ள அன்பர்கள் எனக்கு புத்தகங்கள் வாங்கி பரிசளிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
0 comments: