ஐ.பி.எல்


மெகா சீரியல் மாதிரி எப்ப முடியும் இழுத்துகிட்டு இருந்த ஐ.பி.எல் , ஒரு வழியாக கொல்கத்தாவின் வெற்றியுடன் இந்த வருடம் முடிவடைந்து விட்டது. ஆனாலும் இந்த ரெண்டு மாசமா நம்ம ஆளுங்க கிரிக்கெட்ட படுத்துன பாடோ, இல்ல கிரிக்கெட் நம்மள படுத்துன பாடோ பெரும்பாடு. சலூன், டீ கடை, ஆபீஸ், வீடு, காலேஜ், எப்.எம், டிவி னு எங்க போனாலும் இந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தான்.
" நேத்து எவண்டா அவனுக்கு கடைசி ஓவர் கொடுத்தது ",
"போயும் போயும் அவன ஒபெனிங் எறக்கி விட்டு இருக்கான் அவன் பந்தை திண்ணே அவுட் ஆயிட்டான்",
"நேத்து கெய்ல் அடிச்சான் பாரு அடி வாண வேடிக்கைதான் போ", ,
"அஸ்வினுக்கு முன்ன மாதிரி பந்து எடுபடறது இல்ல",
"நல்ல பிளேயர்ஸ் எல்லாம் நெறைய இருக்கறானுங்க டீம்ல எடுக்க மாட்டேங்குறாங்க",
"நேத்து நைட் மணி பனிரெண்டு ஆயிடுச்சுபா துங்கறதுக்கு,
"இவனுங்க எப்பவுமே இப்படித்தான் ஜெயிக்கற மாதிரி இருந்துட்டு தோத்து போவானுங்க",
"எல்லாம் காசு விளையாடுது பா",
"இதுல எல்லாம் ஆடுவானுங்க வேற நாட்டுக்கு போனா மண்ணை கவ்விட்டு வருவானுங்க",
இப்படி இதையெல்லாம் டீ கடைலயோ, கோவில் திண்ணைலயோ எவனாவது பேசிட்டு இருக்கறப்ப எதாவது பெருசோ, கிரிக்கெட் புடிக்காதவனோ வந்து "ஏன்டா அவுங்க கிரிக்கெட் ஆடுனா உங்களுக்கு என்னடா சோத்துக்கா வருது, போய் வேலை வெட்டிய பாருங்கடா "-னு அவுங்கள கடுப்பேத்தி விட்டுட்டு இருப்பாங்க.(ஏன்னா அவங்க வேலை இல்லாமதான் வெட்டியா இதை பேசிட்டு இருப்பாங்க) அரைகுறையா ஐ.பி.எல்லையும், பி.சி.சி.ஐ யும் தெரிந்த சிலர் அதன் பின்புலன்களை விமர்சித்து விட்டு அவர்களும் அதையே பார்க்க செல்கின்றனர்.
என்னை பொறுத்தவரை, மன்னிக்கவும். ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களையும், ஐ.பி.எல் லில் விளையாடும் வீரர்களையும், ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களையும் பொறுத்தவரை பக்காவான வியாபாரம் என்பது மட்டுமே உண்மை. மற்ற கிரிக்கெட் வாரியங்கள் சம்பளங்களை நம்ம ஊர் கம்பெனிகள் போல இழுத்துதடித்து கொடுப்பது போல் கொடுத்து கொண்டு இருக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் நிலைமையோ பரிதாபம். சம்பளத்துக்கே போராட்டம் பண்ணி வாங்க வேண்டிய சூழல். நம்ம நாட்டு மக்கள் மாதிரி கிரிக்கெட் பைத்தியங்களும், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருமானம் கொழிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் புரிந்து கொண்ட தொழில் அதிபர்களும், நடிகர் நடிகைகளும் போட்டி போட்டு கொண்டு முதலீடு செய்தனர். இந்த பணபுழக்கம் வேறு நாட்டு வீரர்களையும் இங்கு இழுத்து வந்தது(அந்த வீரர்களும் சொந்த நாட்டுக்கு ஆடாம ஐ.பி.எல்லுக்கு ஆடுவது வேறு விஷயம்). இந்த ஐ.பி.எல் ஒவ்வொரு வினாடிக்கும் பல கோடிகளை பரிவர்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. இதை விட கொடுமை என்னவென்றால் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை கூட பேச இயலாமல் செய்து விடுகின்றது. இந்த விஷயங்களை ஐ.பி.எல் மறக்கடிப்பதால் என்னவோ இதை எல்லாம் இந்த பொம்மை அரசு கிரிக்கெட் பார்ப்பதை போல வேடிக்கை பார்க்கிறதோ?
டிஸ்கி: இவ்வளவு விஷயங்களை பேசும் எனக்கும் கிரிக்கெட் பிடிக்காது என்பது இல்லை. அது விளையாட்டாக, பொழுது போக்காக இருக்கும் போது மட்டுமே. வியாபாரம் ஆனா பின்பு நமக்கு என்ன சோத்துக்கா வருது.....

0 comments: