கிரிக்கெட்டும் நானும்

உலகில் வேறு எந்த விளையாட்டை போலவும் கிரிக்கெட் இல்லை. ஆனால் கிரிக்கெட் அளவிற்கு வேறு எந்த விளையாட்டும் விளையாடப்படுவதில்லை. உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து அதிகம் பேரால் விளையாடப்படும் விளையாட்டு கிரிக்கெட். கால்பந்து, ஹாக்கியை விளையாட ஆட்களும் இடமும் அதிகமாக தேவை. ஆனால் இந்திய நகரங்களின் சாலைகளில், தெருக்களில் விளையாட கிரிக்கெட் தான் ஏதுவானது.இதற்கு ஒரு மட்டையும் பந்தும் இருந்தாலே போதுமானது.
கிரிக்கெட் மேல் முன்பு எனக்கு இருந்த ஆர்வம் இப்போது இல்லை.ஆனால் சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை வீடு, ரோடு, காடு என எல்லா எடத்துலயும் விளையாடி இருக்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து விடிய விடிய தூங்காமல் பார்த்து இருக்கிறேன் . அப்போது பாகிஸ்தானை வீழ்த்தும் போதும் கடைசி ஓவரில் இந்தியா திரில் வெற்றி பெறும்போதும் துள்ளி குதித்த அந்த ஆர்வம் இப்போது இல்லை. இந்த பதிவுல எனக்கும் கிரிக்கெட்டுக்குமான சின்ன ப்ளாஷ்பேக்



1997- 1998 அந்த வருடங்களில்தான் கிரிகெட் எனக்கு அறிமுகம் ஆனது. அப்போது எங்க ஊரில் கிரிக்கெட் Tournament நடந்துகொண்டு இருந்தது. நாங்களும் ஆர்வத்தின் காரணமாக அங்கு செல்வோம். நாம போன உடனே என்ன பேட் கொடுக்கவா போறாங்க. பவுண்டரில பந்து பொறுக்கி வீசத்தான் நம்மள உபயோகப்படுத்துவாங்க. அதுக்கே சரியான போட்டியா இருக்கும். எவன் மொதல்ல ஒடி பந்து எடுத்து வீசுவதுனு. இப்படியாக கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமா விளையாட ஆரம்பிச்சோம். சரியா சொல்லனும்னா. 1999 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள்தான், தொலைக்காட்சியில் எனக்கு கிரிக்கெட் அறிமுகம். அந்த உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா விளையாடும் போட்டிகள், அரையிறுதி, இறுதி போட்டிகள் மட்டும் தூர்தர்ஷனில் போடுவார்கள். நான் இன்றுவரையில் மறக்காமல் இருக்கும் இரண்டு போட்டிகள். அந்த உலகக்கோப்பையில் இந்தியா - இலங்கை விளையாடிய ஆட்டம். அந்த போட்டியில் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட்டின் ஆட்டம் இன்னும் மறக்கமுடியாதது. அந்த போட்டியில் இருந்துதான் கங்குலி ரசிகன் ஆனேன். அடுத்த போட்டி அந்த உலகக்கோப்பை போட்டியில் துரதிஷ்டமாக இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த தென்னாப்பிரிக்காவும் - ஆஸ்திரேலியாவும் மோதிய அரையிறுதி போட்டி. அந்த போட்டியில் இருந்து தான் குளூஸ்னர் பிடித்து போனார்.
.


நான் கிரிகெட் விளையாடுவேனே தவிர பிரமாதமான ஆட்டம் எல்லாம் இல்லை. உயர்நிலையில் படிக்கும்போது ஆள் இல்லை என்றால் மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வார்கள். அப்படி சேர்ந்த ஆட்டத்திலும். பந்தும் வீச தரமாட்டானுக. பேட் பண்ணவும் தரமாட்டானுக. ஆனா பேட் வாய்ப்பு விக்கெட் எல்லாம் போன கடைசில தான் தருவாங்க. அதுக்காகவே மத்தவங்க சீக்கிரம் அவுட் ஆகனும்னு வேண்டிகிட்டு இருப்பேன். பள்ளி, உள்ளுர் என கிரிகெட் தொடர்ந்து கொண்டு இருந்தது.


கிரிக்கெட்டின் அதீத ஈடுபாட்டின் காரணமாக 10 ஆம் வகுப்பில். நல்ல மதிப்பெண் பெரும் வாய்ப்பை இழந்தேன். உயர்நிலை பள்ளி சென்றதும் கிரிக்கெட் விளையாடுவது படிப்படியாக குறைந்தது. அதனாலோ என்னவோ +2 வில் நல்ல மதிப்பெண் பெற்றேன். கல்லூரி சென்ற பின். கிட்டதட்ட மறந்தே விட்டேன். ஆனால் பார்த்து கொண்டு இருந்தேன். ஐ,பி.எல் ஆரம்பித்த பின்,கிரிக்கெட் அரசியல், கார்பரேட் கைகளில் தஞ்சம் புகுந்து,பணம் கொழிக்கும் பணக்கார விளையாட்டாக மாறி போனதாலோ? அல்லது பணிச்சுழல் காரணமாகவோ? ஏன் என்று தெரியவில்லை எனக்கு முன்பு இருந்த ஆர்வம் இப்போது இல்லை. சில விசயங்கள் காலம் கடந்த பின்பு தான் எனக்கு புரிந்தது . அந்த வகையில் இப்போது கிரிக்கெட் பார்பதற்கு தடா போட்டு கொண்டேன் . அனால் இப்போது மட்டையை கையில் எடுத்துவிட்டேன். வார விடுமுறையில் விளையாட ஆரம்பித்தாயிற்று.
( நானே விடனும்னு நெனச்சாலும் கிரிகெட் என்னை விடாது போல இருக்கு).

2 comments:

Life Of Pi - 3D


லைப் ஆப் பை படத்தோட ட்ரைலர் முதல் தடவையா அரைகுறையா பார்த்தேன். என்னமோ பாலிவுட் படம் போல இருக்குது. கப்பல், புலின்னு எல்லாம் காட்றானுங்களே , ஏற்கனவே கடந்த ரெண்டு,மூணு மாசமா வந்த படங்கள பாத்து நொந்து போய், பீட்சா, துப்பாக்கி-னு பாத்து கொஞ்சம் டீ குடிச்ச மாதிரி தெம்பா இருக்கேன் . இனி இந்த படமும் நம்ம லைப் ல முகமூடி , போட்டுக்கிட்டு தாண்டவம் ஆடிடுச்சுனா நம்மளும் skyfall ஆக வேண்டியது தான்னு நெனச்சுட்டு இருந்தேன். அப்பறம் படமும் ரிலீஸ் ஆச்சு, நம்ம பயலுகளும் இந்த படம் பார்க்கலையா,ஒரு தகவலும் காணோம்னு,யோசிச்சுகிட்டே இருந்தப்ப நம்ம மின்சாரவாரியம் மூலமா அதிசயமா கரண்ட் வந்துச்சு. நம்மளும் வந்த கரண்டுக்கு எப்படி நம்ம பங்க குடுக்கறதுன்னு யோசிச்சேன். ரொம்ப நாளா மின்சாரத்த பாக்காம இருக்கற டிவி கண்ணுல பட்டுச்சு அப்பறோம் அடுத்த ஐந்தாவது செகண்ட் ஒளியோடு, ஒலியையும் பரப்பியது. அந்தநேரம் எதேச்சையா மறுபடி ட்ரைலர் பார்த்தேன், அட நல்லா இருக்குதேனு.
அப்பறமா தான் தெரிஞ்சுது படத்த நம்ம நாட்டுல எடுத்துருக்காங்கனு.அப்பறம் கூகுள் சர்ச் பண்ணி மறுபடி ட்ரைலர் பார்த்ததுல நம்ம டைரக்டர் ஆங்-லீனு தெரிஞ்சுது. ஆனா இந்த பேர எங்கயோ கேள்விப்பட்டு இருக்கோமேனு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா புருஸ் லீ, ப்ரெட் லீ, சாம் லீ இப்படி லீயாவே நமக்கு நெறைய பேரு தெரியறதால இந்த லீ கேள்விப்பட்ட மாதிரி இருக்குதோனு விக்கிபீடியா தட்டுனதுல தெரிஞ்சுது croching tiger hidden dragon, hulk பட டைரக்டர்னு. இவர போய் மறந்துட்டோமே இந்த சினிமா உலகம் நம்மை மன்னிக்குமா?, அதனால இந்த படாத பாத்து அதுக்கு பரிகாரம் பண்ணிடலாம்னு இந்த படம் பாத்துட்டேன்,. லேட்டா பார்த்தாலும் பாருங்க இந்த படத்துக்கு ஒரு பதிவு போடற அளவுக்கு ஆகிடுச்சு. ஏன்னா இதுக்கு முன்னாடி துப்பாக்கி, skyfall , pizza ,சுந்தரபாண்டியன் , தாண்டவம், பார்த்துட்டு எழுதாதவன் இதுக்கு எழுதறேன். அப்படினா இந்த படத்துல ஒன்னும் இல்லையோனு நீங்க நெனச்சுட வேண்டாம். ஆனாலும் விஷயம் இருக்கு. அது என்னனு பாக்கலாம்.
இர்பான் கான் அவர்தான் pi. கனடாவில் வசித்து வரும் அவரை எழுத்தாளர் ஒருவர் சந்திக்கிறார். அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி தெரிந்து கொண்டு கதை எழுத வருகிறார். இர்பான் கான் தனது சிறு வயதில் இருந்து வாழ்கை நிகழ்வுகளை ஆரம்பிக்கிறார். அவரது குடும்பம் பாண்டிச்சேரியில் வசித்து வருகிறது, அவரது தந்தை அதுல் ஹசன், அம்மா தபு, அண்ணன் என குடும்பம், அவர்கள் ஒரு மிருககாட்சி சாலையை நடத்தி வருகிறார்கள், ஒரு கட்டத்தில் மிருககாட்சி சாலை மூலம் பணம் சம்பாதிக்க இந்தியாவில் முடியாது. ஆக மிருகங்கள் அனைத்தையும் கனடாவில் விற்று அதன் மூலம் வேறு தொழில் செய்ய கப்பலில், தனது குடும்பம், மற்றும் மிருகங்களுடன் பயணம் செய்கிறார்கள், வழியில் புயல் தாக்குதலில் கப்பலில் உள்ள அனைவரும் இறந்துவிட ஒரு சிறு படகில் சிறுவன் பை- உடன் ஒரு வரிக்குதிரை, ஒரு கழுதைப்புலி , ஒரு உராங்குட்டான், ஒரு பெங்கால் புலியும் தப்புகின்றன. ஒரு கட்டத்தில் கழுதைப்புலி வரிக்குதிரையும் , குரங்கையும் கொன்றுவிட, கழுதைப்புலி புலி கொன்றுவிடுகிறது. இப்போது படகில் பை மற்றும் புலி மட்டுமே பயணம் செய்கிறார்கள். யாரும் துணைக்கு இல்லாத படகில் பை. புலிக்கு இரை யாகிவிடுவோம் என்ற பயத்துடனே பயணிக்கிறான். சில நிகழ்வுகளுக்குப் பின். பையும் புலியும் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள். இறுதியில் புலியும் சிறுவனும் எப்படி தப்பிக்கின்றனர் என்பதே கதை.
கிராபிக்ஸ், 3d எபக்ட்ஸ் ,சவுண்ட் எபக்ட்ஸ்,இசை என எல்லா துறைகளிலும் பட்டையை கிளப்பியுள்ளனர் இந்த படக்குழுவினர். இந்த படத்தில் வரும் புலி உண்மையான ஒன்றா, க்ராபிஸ்சா என்று கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவிற்கு கடுமையாய் உழைத்துள்ளனர். பெரியவனான பை ஆக நடித்த இர்பான் கானை விட, சிறுவனாக நடித்த சுராஜ் நடிப்பு நன்றாக இருந்தது. இந்த படத்தில் ஒன்றிரண்டு காதல் காட்சிகளும் உண்டு. ஒரு சில தேவை இல்லாத காட்சிகள்,ஒரு சில இடங்களில் வரும் லாஜிக் மிஸ்டேக்ஸ், சில நம்ப முடியாத காட்சிகள் தவிர படம் மிகவும் நன்றாக இருந்தது. அந்த காலத்திய பாண்டிச்சேரி, பை என்ற பெயர் ஏற்பட காரணம், சுராஜ் - சரவந்தி அகியோருக்கிடையான காதல், ரிச்சர்ட் பார்க்கர் என்ற பெயர் புலிக்கு வரும் கரணம் போன்ற சில சுவாரஸ்யமான காட்சிகளின் மூலம் நம்மை ஈர்க்கிறார்கள்.மத உணர்வுகளையும் மனித உணர்வுகளையும் மிருக குணங்களையும் ஒருங்கே சொல்ல முயன்று ஒரு பீல் குட் திரைப்படத்தை தந்துள்ளார் இயக்குனர் ஆங்-லீ.

இந்த படம் யான் மர்டேல் எழுதி 2001 ஆம் ஆண்டு வெளிவந்த லைப் ஆப் பை நாவலை கொண்டு எடுக்கப்பட்டது . இந்த படம் ஒரு சில ஆஸ்கார்களை வெல்லும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. எதற்கு கிடைக்கிறதோ இல்லையோ கிராபிக்ஸ் பணிக்காக கிடைக்கும். இதை 2டி யில் விட 3டியில் பார்த்தால் நன்றாக இருக்கும். நிச்சயம் ஒரு நல்ல அனுபவமாக இந்த படம் இருக்கும்.

0 comments: