உலகில் வேறு எந்த விளையாட்டை போலவும் கிரிக்கெட் இல்லை. ஆனால் கிரிக்கெட் அளவிற்கு வேறு எந்த விளையாட்டும் விளையாடப்படுவதில்லை. உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து அதிகம் பேரால் விளையாடப்படும் விளையாட்டு கிரிக்கெட். கால்பந்து, ஹாக்கியை விளையாட ஆட்களும் இடமும் அதிகமாக தேவை. ஆனால் இந்திய நகரங்களின் சாலைகளில், தெருக்களில் விளையாட கிரிக்கெட் தான் ஏதுவானது.இதற்கு ஒரு மட்டையும் பந்தும் இருந்தாலே போதுமானது. கிரிக்கெட் மேல் முன்பு எனக்கு இருந்த ஆர்வம் இப்போது இல்லை.ஆனால் சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை வீடு, ரோடு, காடு என எல்லா எடத்துலயும் விளையாடி இருக்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து விடிய விடிய தூங்காமல் பார்த்து இருக்கிறேன் . அப்போது பாகிஸ்தானை வீழ்த்தும் போதும் கடைசி ஓவரில் இந்தியா திரில் வெற்றி பெறும்போதும் துள்ளி குதித்த அந்த ஆர்வம் இப்போது இல்லை. இந்த பதிவுல எனக்கும் கிரிக்கெட்டுக்குமான சின்ன ப்ளாஷ்பேக்
1997- 1998 அந்த வருடங்களில்தான் கிரிகெட் எனக்கு அறிமுகம் ஆனது. அப்போது எங்க ஊரில் கிரிக்கெட் Tournament நடந்துகொண்டு இருந்தது. நாங்களும் ஆர்வத்தின் காரணமாக அங்கு செல்வோம். நாம போன உடனே என்ன பேட் கொடுக்கவா போறாங்க. பவுண்டரில பந்து பொறுக்கி வீசத்தான் நம்மள உபயோகப்படுத்துவாங்க. அதுக்கே சரியான போட்டியா இருக்கும். எவன் மொதல்ல ஒடி பந்து எடுத்து வீசுவதுனு. இப்படியாக கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமா விளையாட ஆரம்பிச்சோம். சரியா சொல்லனும்னா. 1999 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள்தான், தொலைக்காட்சியில் எனக்கு கிரிக்கெட் அறிமுகம். அந்த உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா விளையாடும் போட்டிகள், அரையிறுதி, இறுதி போட்டிகள் மட்டும் தூர்தர்ஷனில் போடுவார்கள். நான் இன்றுவரையில் மறக்காமல் இருக்கும் இரண்டு போட்டிகள். அந்த உலகக்கோப்பையில் இந்தியா - இலங்கை விளையாடிய ஆட்டம். அந்த போட்டியில் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட்டின் ஆட்டம் இன்னும் மறக்கமுடியாதது. அந்த போட்டியில் இருந்துதான் கங்குலி ரசிகன் ஆனேன். அடுத்த போட்டி அந்த உலகக்கோப்பை போட்டியில் துரதிஷ்டமாக இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த தென்னாப்பிரிக்காவும் - ஆஸ்திரேலியாவும் மோதிய அரையிறுதி போட்டி. அந்த போட்டியில் இருந்து தான் குளூஸ்னர் பிடித்து போனார். .
நான் கிரிகெட் விளையாடுவேனே தவிர பிரமாதமான ஆட்டம் எல்லாம் இல்லை. உயர்நிலையில் படிக்கும்போது ஆள் இல்லை என்றால் மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வார்கள். அப்படி சேர்ந்த ஆட்டத்திலும். பந்தும் வீச தரமாட்டானுக. பேட் பண்ணவும் தரமாட்டானுக. ஆனா பேட் வாய்ப்பு விக்கெட் எல்லாம் போன கடைசில தான் தருவாங்க. அதுக்காகவே மத்தவங்க சீக்கிரம் அவுட் ஆகனும்னு வேண்டிகிட்டு இருப்பேன். பள்ளி, உள்ளுர் என கிரிகெட் தொடர்ந்து கொண்டு இருந்தது.
கிரிக்கெட்டின் அதீத ஈடுபாட்டின் காரணமாக 10 ஆம் வகுப்பில். நல்ல மதிப்பெண் பெரும் வாய்ப்பை இழந்தேன். உயர்நிலை பள்ளி சென்றதும் கிரிக்கெட் விளையாடுவது படிப்படியாக குறைந்தது. அதனாலோ என்னவோ +2 வில் நல்ல மதிப்பெண் பெற்றேன். கல்லூரி சென்ற பின். கிட்டதட்ட மறந்தே விட்டேன். ஆனால் பார்த்து கொண்டு இருந்தேன். ஐ,பி.எல் ஆரம்பித்த பின்,கிரிக்கெட் அரசியல், கார்பரேட் கைகளில் தஞ்சம் புகுந்து,பணம் கொழிக்கும் பணக்கார விளையாட்டாக மாறி போனதாலோ? அல்லது பணிச்சுழல் காரணமாகவோ? ஏன் என்று தெரியவில்லை எனக்கு முன்பு இருந்த ஆர்வம் இப்போது இல்லை. சில விசயங்கள் காலம் கடந்த பின்பு தான் எனக்கு புரிந்தது . அந்த வகையில் இப்போது கிரிக்கெட் பார்பதற்கு தடா போட்டு கொண்டேன் . அனால் இப்போது மட்டையை கையில் எடுத்துவிட்டேன். வார விடுமுறையில் விளையாட ஆரம்பித்தாயிற்று.
( நானே விடனும்னு நெனச்சாலும் கிரிகெட் என்னை விடாது போல இருக்கு).