பாரதியார் - இணையற்ற கவிஞன்

என்னங்க பண்றது நானும் எத எழுதுறதுனு ஒசிச்சு பார்த்தேன் ஒன்னும் புலப்படல. சரி பாரதியார் டக்குனு ஞாபகத்துக்கு வந்தாரு,. சரி அவர எனக்கு ரொம்ப பிடிக்குமே, அவர பத்தி ஒரு பதிவாவது போடணும்னு தோணுச்சு. அதனால இந்த ப்ளாக்கில் அவர பத்தி பதிவு போடலனா நல்லா இருக்காதுனு இத எழுதறேன். யார் இத படிச்சாலும் தவறுகள் இருக்கும் பட்சத்தில் மன்னிக்கவும்.
--------------------------------------------------------------------------------
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவிஞரான பாரதியார் நான் மிகவும் விரும்பும் ஒருவர்,தனக்கே உரிய பானியில், நடையில், எவரைக் கண்டும் அஞ்சாமல் கவிதைகளை அள்ளி வீசியவர், இவரது அஞ்சாமை உணர்வு என்னை மிகவும் கவர வைத்தது. சில கவிதைவரிகளில் வீரம் நம்மை ஆட்கொள்ளும், காதல் உணர்வு நம்மை காதல் வயப்பட வைக்கும்.
தமிழ் மொழியின் பெருமையை ஒரே வரியில் சொல்கிறார் பாருங்கள் இப்படி

" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் "

இப்படி இவர் சொல்ல வேண்டுமானால் மற்ற மொழிகளில் எவ்வளவு புலமை இருக்க வேண்டும்.
இவர் தான் செய்யும் தொழில் இதுதான் என்று சொல்லும் இடம் எவ்வளவு அழகானது, இயல்பானது என்று பாருங்கள்

" எமக்கு தொழில் கவிதை செய்வது "

நான் ரசித்த மற்றொரு வரி

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா சற்றே மிதிக்கிறேன் "

மரணத்தை இவ்வளவு துணிவுடன் எதிர் கொண்ட இவரது அஞ்சா நெஞ்சம் என்னை மிகவும் கவர்ந்தது
பெண்மை, காதல், வீரம், வாழ்க்கை, நீதி, ஆன்மிகம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒரே மகாகவி பாரதி தான்.
-------------------------------------------------------------------------------
பாரதியார் பத்தி எழுதலாம்னு இதை எழுதுனேன். ஆனாலும் இன்னும் நல்லா எழுத முயற்சி செய்கிறேன்

2 comments:

  1. நல்லா எழுத முயற்சி பண்ணுங்க கண்டிப்பா; உங்கள் பதிவிலே இருக்கும் கருத்துப்பிழைகளை வைத்துச்சொல்றேன்.

    முதலில், உங்கள் தலைப்பே சரியில்ல.

    பாரதி ஒரு சிறந்த பாவலர் (கவிஞர்); நல்ல பாவலர்; இனிய பாவலர்; என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் இணையற்ற என்று சொல்வதற்கு நீங்கள் எல்லாத்தமிழ் பாவலர்களையும் படித்திருக்கவேண்டும். அப்படியே செய்திருந்தாலும் ஒரு பாவலரை இன்னொருவரிடன் ஒப்பிடுவது இருவருக்குமே இழுக்கு. ஏனெனில், ஒரு பாவலனிடம் ஒரு குணம் சிற்ப்பாக அமைய, இன்னொருவனிடம் இன்னொன்று சிறப்பாக அமைய, வேறொருவனிடம் வேறொன்று சிறப்பாக அமைய, அச்சிறப்புகளுக்காக நாம் தனித்தனியாக அவர்களைப் படித்து இன்புறுகிறோம். எனவே ஒப்பீடு ஏன்?

    யாமறிந்த மொழிகளிலே என்றுதான் சொன்னார். அவரறியா மொழிகள் ஆயிரக்கணக்கில். அவர் அறிந்த மொழிகள்: சமசுகிருதம், ஆங்கிலம், கொஞ்சம் இந்தி - தமிழைத் தவிர வேறெந்த மொழியிலும் அவர் மாபெரும் அறிஞர் அன்று. இப்படியிருக்க அவர் சொன்னது மேம்போக்கானது. தனக்குத் தெரிந்த நாலு மொழிகளில் தமிழ் சிறந்தது என்பது அடிப்படையிலேயே தவறு. இங்கு ஒப்பீடு என்பது தவறு. பாரதி அந்தத் தவறைச்செய்ய நீங்கள் வழிமொழிகிறீர்கள்.

    எமக்குத் தொழில் கவிதை செய்வது!

    பாவெழுதுதல் தொழிலாகுமா ? ஒரு பாவலன் அதைத் தொழில் என நினைத்துச்செய்வதில்லை. செய்யின் அவன் பாக்கள் சிறக்கா. பாரதியின் வரியின் பொருள் என்னவென்றால், தான் ஒரு பாவலன் மட்டுமே. பாவெழுதல் மட்டுமே தனக்குத் தெரியுமென்பதாகும்.

    காலனை[ப் பற்றி எழுதியது எப்படி வீரம்? மரணத்தைப்பற்றிப்பயப்படுதல் கோழைத்தனமா ? எனக்குத் தெரியவில்லை. சொன்னால் கேட்டுக்கொள்வேன்..

    எந்தவொரு எழுத்தாளனையும் ஆராய்ச்சிக்கண்களோடுதான் படிக்கவேண்டும். இதையே இவ்வார திண்ணை இணைய இதழில் எழுதியிருக்கிறேன். படிக்கவும்.

    ReplyDelete
  2. Kavya...you are right.
    Plus, when you are creating a blog or website, you are not supposed to use verbal tamizh...pure tamizh would get people's attention more...

    ReplyDelete