அடுத்த கட்டம்

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற போட்டி தான் நான் பார்த்த கடைசி கிரிக்கெட் போட்டி. இந்தியா இங்கிலாந்து சென்று விளையாடிய தொடரின் போட்டிகளை நான் காணவில்லை என்றாலும் செய்திகள் மூலமாக விவரங்கள் அறிந்து கொண்டேன்.
இங்கிலாந்து தொடரில் இந்தியாவின் தொடர் தோல்விகளுக்கு காரணம் பல சொல்லப்பட்டன.
ஐ.பி.எல் போட்டிகள், தொடர் போட்டிகள்,காயம், அனுபவம் இன்மை என்று. அதை பற்றி இங்கு நான் சொல்லவில்லை, நம் அணியின் அடுத்த கட்டம் என்ன?

நம் அணி, அடுத்து செய்ய போகும் செயல்பாடுகள் என்ன என்று யோசிக்கவில்லை, அதற்குள் இப்போது சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன.இந்த தொடரில் இந்திய அணிகள் வெற்றி பெறும் பட்சத்தில் பழைய தோல்விகள் மறக்கபடலாம் அல்லது விமர்சனங்கள் உருவாகலாம். எது நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பும் பி.சி.சி.ஐ தான். சிறந்த அணியை உருவாக்கும் திட்டமிடல் இல்லதுதான் இதற்கு காரணம்.

அணிக்கு வீரர்கள் தேர்வு ஐ.பி.எல் -லில் நன்றாக விளையாடும், விளையாடிய வீரர்கள் மட்டும் தேர்வு செய்ய பட்டனர். 20-20 போட்டிகள் அதிர்ஷ்டம் தான் பல வெற்றிகளை தீர்மானித்துள்ளது. அதை மட்டும் கணக்கில் கொண்டு தான் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர், ஒரு வீரர் அணியில் காயம் காரணமாக இல்லை என்றால் அவரது இடத்தை நிரப்பும் மாற்று வீரர் எவரும் இல்லை. அதனால் முழுமையாக உடல் தகுதி பெறாதவர்களை வலுக்கட்டாயமாக சேர்க்கும் நிலைதான் உள்ளது. ஒய்வு நிலையில் உள்ள வீரர்களை எதிர்பார்த்து கொண்டுதான் உள்ளோம்.
ஒரு டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் ஐ.பி.எல் -லில் விளையாடிவர்கள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாதவர்கள். உடல் தகுதி பெறாதவர்கள். இதே நிலை தான் ஒரு நாள் போட்டிகளுக்கும்.
120 கோடி மக்கள் கொண்ட நாட்டில், சிறந்த வீரர்களை கிரிக்கெட் மட்டும் அல்ல எந்த ஒரு விளையாட்டிலும் நம்மால் உருவாக்க தற்போது முடிவதில்லை. காரணம் பயிற்சி குறைவு, மற்றும் சிறந்த பயிற்சியாளர்கள் இல்லாததுதான். சீனா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் செய்யப்படும் அளவிற்கு பயிற்சிகள் இங்கு செய்யபடுவதில்லை அல்லது உக்திகள் கற்றுக்கொள்ள படுவதில்லை.
ஒலிம்பிக் ஆகட்டும், டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம், கால்பந்து, ஹாக்கி உலககோப்பை ஆகட்டும் நாம் வெற்றி பெறுவோமா என்ற எண்ணம தான் உள்ளதே தவிர, நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நிலை இல்லை. திறமையானவர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கான உக்குவிப்புகள் இல்லாததும் காரணமாக இருக்கலாம். திறமையானவர்களை கண்டு அவர்களை உக்குவித்து முறையான, புதிய உக்திகளுடனான பயிற்சி தரும்போது நாம் பல வீரர்களை உருவாக்க முடியும்.

பி.சி.சி.ஐ தனது வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் வரையும் கார்பரேட் கம்பெனிகளின் கீழ் அடமானத்தில் உள்ள வீரர்கள் நாட்டிற்காக விளையாடும் வரையும் இந்திய அணி சிறந்த அணியாக உருவாகாது .டிஸ்கி: கிரிக்கெட் எனக்கு பிடிக்கும் என்பதால் தான் இதை எழுதினேன். தவிர மற்ற விளையாட்டுகளிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.

0 comments: