மயக்கம் என்ன - ஏழாம் அறிவு- வேலாயுதம்-

தீபாவளிக்கு வெளிவரபோவதாக சொல்லப்படும் இந்த மூன்று படங்களின் பாடல்கள் எப்படி இருக்குது?.நாமளும் கொஞ்சம் அலசுவோம்.
இருக்கற பிரச்சனைல இது இப்ப தேவையானு. நீங்கா கேக்கறது தெரியுது. என்ன பண்றது, இப்போதைக்கு ஒரு படம் கூட பாக்கல. பாத்து இருந்த அதை பத்தி எழுதி இம்சை பண்ணி இருப்பேன். அதனால பாட்டுகள பற்றியும் எழுதலாமேன்னு இந்த பதிவு

மயக்கம் என்ன?
தற்போது ஹிட் லிஸ்டில் இடம்பிடித்து பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறது. தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தின் பாடல்கள். இசையமைத்து இருப்பவர் - ஜி.வி. பிரகாஷ்குமார். படத்தோட டைரக்டர் தனுஷோட அண்ணன் தான்.படத்துல செல்வராகவன், தனுஷ் ரெண்டு பேருமே பாட்டும் எழுதி பாடியும் இருக்கறாங்க. "ஓட ஓட தூரம் கொரையாள " எதார்த்தமான பாடல் வரிகளோடு தனுஷ் குரலில் கேட்க மிக நன்றாகவே உள்ளது. "காதல் என் காதல் " பாடலும் இப்போது செம ஹிட். இந்த பாட்டுல தனுஷ் பாடும்
" வெட்ரா அவள, கொல்றா அவள, தேவையே இல்ல " வரிகள் தான் இப்போது இளைஞர்களின் விருப்பமான வரிகள். எனக்கும் இந்த ரெண்டும் பிடிச்சு போச்சு.
அது மட்டும் இல்லாம ட்ரைலர் ல கொஞ்சம் நம்மை கவர்கிறார்கள்.. தீபாவளிக்கு விஜய், சூர்யாவுக்கு தனுஷ் சரியான போட்டியா இருக்க போகிறார்.


ஏழாம் அறிவு
சூர்யா - ஸ்ருதிஹாசன் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள படம். முருகதாஸ் படம் என்பதால் ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
இந்த படத்திற்கு இசை- ஹாரிஸ்ஜெயராஜ்.
ஆனால் மயக்கம் என்ன? கொடுத்த இம்பாக்டை, ஏழாம் அறிவு பாடல்கள் கொடுக்க வில்லை .. ஹரிஷ் ஜெயராஜ் வழக்கம் போல பழைய ட்யூன்களையே தந்து இருப்பது கடுபெற்றுகிறது. ஒரே பாடல் எஸ்.பி.பி பாடியுள்ள " யம்மா யம்மா காதல் பொன்னம்மா " பாடல் மட்டும் ரசிக்கும்படியாக உள்ளது. சூர்யாவின் வித்தியாச கெட்டப்கள்,ஏ.ஆர். முருகதாஸ் இயக்கம் என ரசிகர்களின் ஹீர்பீட்டை இப்போதே எகிரவைதுள்ள படம்.வேலாயுதம்
நமது இளைய தளபதி நடித்து இருக்கும் படம். தொடர் தோல்விகளால் நொந்து இருக்கும் விஜய் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்து இருக்கும் படம். படத்தின் இயக்குனர் -ராஜா(ஜெயம் , எம்.குமரன், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி போன்ற தெலுங்கு ரீமேக் படம்களை தனது தம்பியை வைத்து மட்டும் இயக்கியவர்). தற்போது சொந்த கதையில் முதல் முறையாக விஜய்யை வைத்து இயக்குகிறார்.
படத்திற்கு இசை -விஜய் ஆன்டனி,
இதிலும் வழக்கம் போல் விஜய் அறிமுக பாடல் "சொன்னா புரியாது" , கடுபேற்றுகிறது, சங்கீதா ராஜேந்திரன் குரலில் " மாயம் செய்தாயோ " பாடல் பளிச். மற்றொரு பாடல் "மொளச்சு மூணு இலைய விடல பாடல் " காய்கறிகள் வாசனையுடன் கேட்க இனிமையான மெலடி.
மற்றபடி மற்றவை வழக்கம் போல்.
0 comments: