திருப்பூர் எங்கே ?

நான் ஊத்துக்குளியில் வேலை செய்து கொண்டு இருந்தாலும் லேபிள் பிரிண்டிங் வேலை என்பதால் திருப்பூர சார்ந்துதான் எங்க வேலை. திருப்பூருக்கும் ஊத்துகுளிக்கும் 15 கிலோமீட்டர் தான். வாரம் எப்படியாவது கம்பனி வேலையாக மூணு, நாலு தடவையாவது திருப்பூர் வருவேன் கடந்த பத்துநாளா சொந்த வேலைகள் காரணமா திருப்பூர் பக்கம் போக முடியல.. இப்பவும் வேலை இல்லை. சரி இன்னைக்காவது தீபாவளிக்கு துணி எடுக்க போலமேனு போனேன் போனேன்.(மன்னிக்கவும் எனக்கு எடுக்க போனேன்).
தீபாவளி பரபரப்புல இருக்கும்னு பார்த்தா எல்லா கடைகளும் காத்து வாங்கிட்டு கெடக்கு. திருப்பூர்லனு குறிப்பிட்டு சொல்லக்கூடிய சென்னை சில்க்ஸ்ல போன வருசத்துல 25 சதவீதம் கூட்டம் தான் இப்ப இருக்கு. நகை, வீட்டு உபயோகபொருள்கள் வாங்க மக்கள் இப்ப திருப்பூர்ல இல்லை. திருப்பூர் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே உள்ளது. டையிங் பிரச்சனை புதிய ஆட்சி வந்தா மாறிடும்னு நெனச்சவங்களுக்கு ஏமாற்றம்தான். எக்ஸ்போர்ட் கம்பெனிகள்ல கிட்டத்தட்ட வேலையே இல்லை. டொமஸ்டிக் கம்பனிகள் மட்டும்தான் இப்போதைக்கு திருப்பூர்ல தீபாவளி பரபரப்புல ஓடிகிட்டு இருக்குது. இன்னைக்கு நெலமை என்னன்னா போனவருஷம் இதே தீபாவளி டைம்ல எல்லா துணிக்கடைலயும் கூட்டம். பஸ் ஸ்டாண்ட்ல கயிறு கட்டி வரிசையா பஸ் ஏத்துனாங்க. இந்த வருஷம் என்னமோ நெலமை தலைகீழ்உள்ளாட்சி தேர்தல் கூட காரணமா இருக்கலாம்.
இப்ப அங்கங்க சோதனை முறைல டையிங் ஓட்டராங்கனு சொல்றாங்க. இருந்தாலும் ஆட்சில இருக்கறவங்க இந்த பிரச்சனைக்கு யாருக்கும் பாதிப்பு இல்லாம முடிவு எடுத்து கொஞ்சம் சீக்கிரம் கவனிச்சாதான் திருப்பூர் மீண்டும் பழையபொலிவு பெறும்.

0 comments: