நான் ரசித்த பாடல்கள்- வெண்ணிலா கபடி குழு

நான் எவ்வளவோ பாடல்களை கேட்டு இருக்கிறேன். "மன்னிக்கவும், நாம் கேட்டு இருப்போம்", அவற்றில் சில பாடல்கள் மட்டும் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும் அப்படி எனக்கு பிடித்த பாடல் தான் வெண்ணிலா கபடி குழு பட பாடல்கள் . இதை நான் இப்போது இங்கே எழுதுகிறேன் என்றால் இன்று இந்த படத்தை சன் டிவியில் இன்று மீண்டும் பார்த்தேன். விஷ்ணு - சரண்யா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காகவே எவ்வளவு முறை வேண்டுமானாலும் பார்ப்பேன். ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் சரண்யாவின் எக்ஸ்பிரசன்ஸ் சான்சே இல்லை.

இந்த படத்தின் இசையமைப்பாளர் செல்வகணேஷ், அவருக்கு இது முதல் படம். முதல் படத்திலேயே பாடலிலும் சரி பின்னணி இசையிலும் சரி பின்னி எடுத்து இருக்கிறார். காதல் காட்சிகளில் வரும் அழகான பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்தமானது. இப்படம் வெளிவரும் முன்பே ஹிட்டடித்த பாடல் "லேசா பறக்குது மனசு" கார்த்திக் - சின்மயி இன் குரல்களில் இனிமையான மெலடியில் மனதை வருடுகிறது. கார்த்திக்கின் குரலில் மற்றொரு பாடலான "பட பட வென " பாடல் அந்த அளவிற்கு மெலோடியாக இல்லை என்றலும் கேட்கும்போது இனிமை. ஹரிசரண் குரலில் "உயிரில் ஏதோ " பாடல் காதல் பிரிவை காட்டும் சூப்பர் மெலடி.

மெலடி பாடல்கள் எப்போதும் எனது சாய்ஸ். அதனால்தான் இந்த படத்தில் வந்த மூன்று பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
-------------------------------------------------------------------------------

0 comments: