இந்த வருடத்தில் உலக பேட்மேன் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களால் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட படம்.அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணங்கள் நோலன், மற்றும் அவர் இதற்கு முன் இயக்கிய
BATMAN BEGINS மற்றும்
THE DARK KNIGHT படங்களின் வெற்றியும் தான்.
சூப்பர் ஹீரோ வரிசையில் பேட்மேன் பற்றி தெரியும் என்றாலும் பேட்மேன் சீரீஸ் படங்களை நான் பார்த்ததில்லை.நான் அதிகம் ரசித்த சூப்பர் ஹீரோ
SPIDERMAN மட்டுமே, மற்றபடி சூப்பர்மேன் ரிட்டர்ன் மட்டும் பார்த்து இருக்கிறேன். ஆரம்பத்தில் பேட்மேன் படங்கள் பார்க்க வாய்ப்பு இருந்தும் அப்படங்களை பார்க்க இயலவில்லை. ஆக எனக்கு பேட்மேன் பேர தவிர ஒன்னும் தெரியாது. அப்பறம் கொஞ்ச நளைக்கு முன்னாடி நோலன், பேட்மேன் பத்தி எல்லாரும் ஆளாளுக்கு பேச ஆரம்பிக்க நானும் கருந்தேள் கண்ணாயிரம் மற்றும் லக்கி லிமட் ப்ளாக்ல அத பத்தி படிக்க போக, ஆர்வம் மிகுதில பழைய ரெண்டு படங்களையும் பார்த்துட்டு முதல் நாள் செகண்ட் ஷோவுக்கு போனேன்.
THE DARK KNIGHT RISES
ஆரம்ப காட்சியில் இந்த கதையின் வில்லன்
BANE விமானத்தில் ரஷ்ய நியுக்ளியர் விஞ்ஞானி ஒருவரை கடத்துகிறான். பின் அந்த விமானத்தை விபத்துக்குள்ளாகி தப்புகிறான். இங்கே கோதம் சிட்டியில் ஹார்வி டென்டின் எட்டாவது நினைவு நாளில் உண்மையை சொல்லவரும் கமிஷ்னர் கோர்டன் அதை சொல்லாமலே பின் ஒரு நாளில் சொல்வதாக சொல்லி அந்த உரையை தன்னுடனே வைத்துகொள்கிறார். தனது காலில் அடிபட்ட காரணத்தால் மாளிகையை விட்டு எங்கும் செல்லாமல் இருக்கிறார் புரூஸ் வெயின். அவரது மாளிகைக்கு திருட வரும் கேட் வுமன் அங்கிருந்து நெக்லஸ் ஒன்றை திருடி செல்கிறாள் அத்துடன் புரூஸ் வெயின் கைரேகையும் திருடப்படுகிறது. அந்த கைரேகையை மாபியா கும்பலுக்கு விற்கும் போது. அந்த இடம் கமிஷ்னர் கோர்டன் அவர்களால் சுற்றிவளைக்கப்படுகிறது. அவர்களை தொடர்ந்து செல்லும் கோர்டன் பேன் இருப்பிடத்தை அறிகிறார். பேன் அவரை தாக்கி தூக்கி விசுகிறான். அவர் கீழ் நிலை போலீசான ஜான் பிளேக மூலம் காப்பாற்றபடுகிறார். கோர்டன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருக்கும் இடத்துக்கு ப்ரூஸ் தன் முகத்தை மறைத்துக்கொண்டு சென்று பார்க்கிறார். அவரிடம் பேட்மேன் இனி வரமாட்டன் என்று சொல்கிறார். கோதம் சிட்டி மிக ஆபத்தில் இருப்பதாகவும்
BANEஐ சமாளிக்க பேட்மேன் வரவேண்டும் என்றும் கோர்டன் சொல்கிறார்.
இந்த நிலையில் பேன் கோதம் நகரத்தில் படிப்படியாக தன்னுடய வில்லத்தன செயல்களில் ஈடுபட துவங்குகிறான். புரூஸ் வேய்ன் நிறுவனம் நட்டத்தில் இயக்குவதாக கூறி புதிய இயக்குனராக மிராண்டா டேட் என்ற பெண் நியமிக்க படுகிறாள். அவளிடம் தன்னுடைய நியுக்ளியர் எனர்ஜி ப்ராஜெக்ட் திட்டம் பற்றியும் கூறி அதனை புரூஸ் வேய்ன் அவளிடம் ஒப்படைக்கிறார். பின் புரூஸ் பேட்மேனாக மாறி கேட் வுமனிடம் பேன் இருப்பிடத்தை கட்டுமாறு கேட்க அவள் பேன் இடத்தை காட்டுகிறாள். அங்கு பேனால் புரூஸ் வேய்ன் முதுகு உடைக்கபட்டு பேட்மேன் பாதாள சிறையில் வைக்கபடுகிறார். இங்கு நகரில் பல இடங்களில் அழிவை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் பேன் வேய்னின் நியுக்ளியர் எனர்ஜியை ரஷ்ய விஞ்ஞானி உதவியுடன் அணுகுண்டாக மாற்றி, பின் அவரையும் கொன்றுவிட்டு கொஞ்ச நாளில் நகரம் அழியபோகிறது என்று சொல்லிவிடுகிறான்.
இதன் பின் புரூஸ் வேய்ன் பாதாள சிறையில் இருந்து தப்புகிறரா? பேனை சமாளித்தாரா ? கோதம் சிட்டியை காப்பாற்றினாரா? என்பதை ரொம்ப நீளமாக சொல்லி இருக்கிறார்கள்.
படத்தில் பேட்மேன் வரும் காட்சிகள் குறைவே, பேட்மேனும் சாதாரண மனிதனே அவனுக்குள்ளும் பல போராட்டங்கள் இருக்கிறது, எனவே மக்கள் எல்லா சூழ்நிலைகளிலும் யாராவது ஒருவர் தங்களை காப்பாற்ற வருவார் என்ற எண்ணத்தை கொள்ளாமல் மக்கள் தங்களுக்கான அளவில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தை ஆளாளுக்கு எழுதி தள்ளி விட்டார்கள், சிலர் படம் அருமை என்றும், சிலர் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், சிலர் மொக்கை என்றும் சொல்கிறார்கள், ஆனால் பேட்மேன் பேரை மட்டும் கேள்விப்பட்டு, சில பல பதிவுகளின் பேட்மேன் பற்றி தெரிந்து கொண்டு சென்றதாலும், மற்றும் இதற்கு முந்தைய பாகங்களை தற்சமயம் பார்த்து விட்டு சென்றதால் என்னவோ படம் எனக்கு நன்றாகவே இருந்தது போல் இருந்தது.
மற்றபடி ரசிகர்களை மோசம் செய்யவில்லை என்றே சொல்லுவேன்.
நோலன் பற்றிய சில ஆச்சர்ய தகவல்கள் மற்றும் அவரின் படங்களை பற்றி அறிந்துகொள்ளவும் THE DARK KNIGHT RISES உதவியது.
இந்த படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள சில பதிவுகள் இங்கே
கருந்தேள்
பாதசாரி
லக்கி லிமட்
ஹாலிவுட்ராஜ்
யுவகிருஷ்ணா
0 comments: