திருப்பூர் எங்கே ?

நான் ஊத்துக்குளியில் வேலை செய்து கொண்டு இருந்தாலும் லேபிள் பிரிண்டிங் வேலை என்பதால் திருப்பூர சார்ந்துதான் எங்க வேலை. திருப்பூருக்கும் ஊத்துகுளிக்கும் 15 கிலோமீட்டர் தான். வாரம் எப்படியாவது கம்பனி வேலையாக மூணு, நாலு தடவையாவது திருப்பூர் வருவேன் கடந்த பத்துநாளா சொந்த வேலைகள் காரணமா திருப்பூர் பக்கம் போக முடியல.. இப்பவும் வேலை இல்லை. சரி இன்னைக்காவது தீபாவளிக்கு துணி எடுக்க போலமேனு போனேன் போனேன்.(மன்னிக்கவும் எனக்கு எடுக்க போனேன்).
தீபாவளி பரபரப்புல இருக்கும்னு பார்த்தா எல்லா கடைகளும் காத்து வாங்கிட்டு கெடக்கு. திருப்பூர்லனு குறிப்பிட்டு சொல்லக்கூடிய சென்னை சில்க்ஸ்ல போன வருசத்துல 25 சதவீதம் கூட்டம் தான் இப்ப இருக்கு. நகை, வீட்டு உபயோகபொருள்கள் வாங்க மக்கள் இப்ப திருப்பூர்ல இல்லை. திருப்பூர் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே உள்ளது. டையிங் பிரச்சனை புதிய ஆட்சி வந்தா மாறிடும்னு நெனச்சவங்களுக்கு ஏமாற்றம்தான். எக்ஸ்போர்ட் கம்பெனிகள்ல கிட்டத்தட்ட வேலையே இல்லை. டொமஸ்டிக் கம்பனிகள் மட்டும்தான் இப்போதைக்கு திருப்பூர்ல தீபாவளி பரபரப்புல ஓடிகிட்டு இருக்குது. இன்னைக்கு நெலமை என்னன்னா போனவருஷம் இதே தீபாவளி டைம்ல எல்லா துணிக்கடைலயும் கூட்டம். பஸ் ஸ்டாண்ட்ல கயிறு கட்டி வரிசையா பஸ் ஏத்துனாங்க. இந்த வருஷம் என்னமோ நெலமை தலைகீழ்உள்ளாட்சி தேர்தல் கூட காரணமா இருக்கலாம்.
இப்ப அங்கங்க சோதனை முறைல டையிங் ஓட்டராங்கனு சொல்றாங்க. இருந்தாலும் ஆட்சில இருக்கறவங்க இந்த பிரச்சனைக்கு யாருக்கும் பாதிப்பு இல்லாம முடிவு எடுத்து கொஞ்சம் சீக்கிரம் கவனிச்சாதான் திருப்பூர் மீண்டும் பழையபொலிவு பெறும்.

0 comments:

சினிமாவும் நானும்

எனது சிறு வயதில் நான் திரைப்பாடல்களோ, திரைப்படமோ அதிகம் கேட்டது இல்லை ஏனென்றால் எங்கள் வீட்டில் மின்சாரம் அப்போது இல்லை. பாட்டரியில் இயங்கும் பிலிப்ஸ் ரேடியோ ஒன்று மட்டும் இருந்தது. அப்போது எப்.எம் கள் இல்லாத காலகட்டம் அதனால் கோவை வானொலி, திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சிகள் மட்டும் கேட்டதுண்டு. அதில் சினிமா பாடல்கள் ஒலிபரப்பு என்பது குறைவே, ஆனாலும் நாடகங்கள், சினிமா ஒலிச்சித்திரம் தவறாமல் கேட்பேன்.

பள்ளி விடுமுறையில் அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் படம் பார்க்க செல்வோம் , வெள்ளி, சனி, ஆகிய நாட்களில் இரவில் தூர்தர்ஷனில் திரைப்படம் போடுவார்கள் அதை பார்போம், பல நாட்கள் தூங்கி விடுவதுண்டு. ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி ஒன்றில் மட்டும் நான் பாடல்கள் பார்த்ததுண்டு. சில வருடங்களில் வீட்டிற்கு மின் இணைப்பு வந்தது, சில மாதங்களுக்கு பிறகு டி.வி வந்தது ஆனாலும் பாடல் கேட்பது ஒரு விருப்பமானதாக இருந்ததில்லை. திரைப்படம் ஞாயிறு மட்டும் பார்ப்பேன்.நானும் உயர்நிலையில் படிக்கும் போது பாட்டு புத்தகங்கள் நண்பர்கள் வாங்கி சினிமாவில் படுவதுபோல் பாடிக்கொண்டு இருப்பார்கள். பாட்டு புத்தகம் வாங்குவது ஒரு போட்டி எந்த புதிய திரைப்படம் வந்தாலும் ஓடி தேடி முதலாவதாக வாங்கினால் அவன் பெரிய ஆள். இந்த வகையில் நானும் வாங்கி சேகரிக்க ஆரம்பித்தேன். அதை வாங்கி ஒருமுறை படிப்பதோடு சரி. அதை திரும்ப படிக்க தோன்றியதில்லை.

கேபிள் இணைப்பு வீட்டிற்கு வாங்கியதும் சினிமா பார்ப்பது அதிகமானது, மேல்நிலை படிப்பு சென்றதும் கொஞ்சம் கொஞ்சமாக பாடல்கள் கேட்பது விருப்பமான ஒன்றாக மாறியது.அந்த கால கட்டங்களில் பல நாட்கள் பள்ளியை கட் செய்துவிட்டு பல சினிமாக்கள் சென்றதுண்டு. ஆனாலும் பாடலாசிரியர் , இசையமைப்பாளர், இயக்குனர் போன்ற விஷயங்கள் கவனிப்பதில் எனக்கு ஆர்வம இருந்ததில்லை, ஆர்வம இருந்ததில்லை என்பதை விட தெரிந்ததில்லை. கல்லூரி சென்ற பிறகு பல நண்பர்கள் தொடர்பு, வெளி உலக அனுபவங்கள், கணினி, இணையம் போன்றவை சினிமா பற்றிய எனது பார்வையை மாற்றிவிட்டன.

எனக்கு ஆங்கில படங்கள் பார்ப்பது பிடிக்கும் அவர்களின் விசுவல், கிரியேடிவ் காரணமாக அவை எனக்கு பிடித்து விட்டன. நான முதன் முதல் பார்த்த ஆங்கில படம் டைட்டானிக். நான் பார்த்த முதல் ஹிந்தி படம் ஷாருக்கின் பாஷா. இன்று நான் சினிமா பார்ப்பது குறைந்து விட்டது. இருந்தாலும் சினிமாக்களை பற்றி ப்ளாக்கில் அறிந்து கொள்கிறேன். உலக சினிமாக்கள் பற்றி தெரியாத நான் ஜாக்கி, மற்றும் பட்டர்பிளை சூர்யா அவர்களின் வலைப்பூக்களின் மூலம் அவற்றை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இன்னும் சினிமாக்களின் பல முகங்கள் நான் அறிந்திராதாவை. முடிந்தவரை அறிந்து கொள்கிறேன்.
------------------------------------------------------------------------------------------


டிஸ்கி:
இந்த பதிவு என்னோட சினிமா அனுபவங்கள்தான். வேறு ஒன்றும் பெரிதாக தெரியாது . ஒரு சினிமா ரசிகன் மட்டுமே நான்.

1 comments:

என்னதான் நடக்குது இங்க?

" ஆரம்பத்தில் இருந்தே ஊழலை ஒழிப்பேன் என்று கூறியவர் எங்கள் தலைவர் விஜயகாந்த்"
- பிரேமலதா விஜயகாந்த்
" ஊழல் ஒழிப்பதற்கு தான் இந்த ரத யாத்திரை " - அத்வானி
" லோக்பால் மசோதா நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் " -
" ஊழலிற்கு எதிராக பாத யாத்திரை தொடங்கினார்" - பாபா ராம் தேவ்

இதெல்லாம் என்னனு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். இந்த ஊழல் ஒழிப்பு பத்தி இப்ப எல்லோரும் தீவிரமா பேசிட்டு இருக்காங்களே நாமளும் எதாவது பண்ணனும்னு ஆளாளுக்கு பேசிட்டு இருக்காங்க. எதுக்கு இதெல்லாம் இவ்ளோ நாளா எல்லாரும் என்ன பண்ணிட்டு இருந்தாங்க?. திடீர்னு ஏன் இவங்க இத பண்றாங்கனு ? மக்களும் திடீர்னு போராட்டம், உண்ணாவிரதம்னு இருந்தாங்க.

இத பத்தி எல்லாம் பேசும் போது இயக்குனர் .ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டில பேசும் போது சொன்னது. மக்களுக்கு பொறுமைனா என்னன்னு தெரியல, ஒரு டிராபிக் ரூல்ஸ் பாலோ பண்ண நினைப்பதில்லை, தனக்கு மட்டும்னு இருக்கற இவங்க எதுக்கு ஊழல், லோக்பால் னு பேசிட்டு இருக்காங்கனு.

இத பத்தி எல்லாம் பேசிட்டு போராட்டம்னு இருக்கறவங்க எல்லாம் அவுங்களோட சுய லாபத்திற்காக தான் பேசிட்டு இருக்காங்க. அரசியல்வாதிங்க இத அரசியலாக்கி தங்கள அடையாளபடுத்த நெனைக்கறாங்க. சில பேர் தங்கள ஹீரோ வாக காட்ட இத உபயோகபடுத்தறாங்க. ஒரு சட்டம் போட்ட மட்டும் ஊழல் ஒளிஞ்சுடும்னு நெனச்சுட்டு இருக்கறது எவ்ளோ பெரிய முட்டாள்தனம். உண்மைய சொல்லணும்னா எனக்கு அன்னா ஹசாரே யார்னு அவர் போராட்டம் நடத்த ஆரம்பிக்கற வரைக்கும் தெரியாது. அதுக்காக அவர செஞ்சது தப்புன்னு நான் சொல்ல வரல, அவருக்கு ஊழல் ஒழிக்க ஒரு கடுமையான சட்டம் வேணும் அதுக்கு நாம எதாவது பண்ணனும் தோணி இருக்கு, அது பெரிய ஆச்சர்யம் இல்ல. நம்ம நாட்டு மக்களுக்கு ஒட்டு மொத்தமா தோணுது இவ்ளோ நாள் ஏன் இவங்களுக்கு தோனலனு ஆச்சர்யம்தான்.

இத பத்தி நெறய எழுதலாம், ஆனா ஏற்கனவே நெறய எழுதிட்டாங்க. அது வேண்டாம் இப்ப நான் சொல்ல வந்தது என்னனா?
இந்த விஷயத்த உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் கூட விட மாட்டேன்கறாங்க. தங்களது பிரசுரங்களில் அன்னா ஹசாரே போட்டோ போட்டு சுயேட்சை வேட்பாளர்கள் அடையாளபடுத்த நினைக்கறாங்க. தங்களோட சுய விளம்பரத்திற்காக அரசியல்வாதிகள் இப்போது உபயோகபடுத்தும் பகடைதான் "ஊழல் எதிர்ப்பு " என்கின்ற ஒன்று.
இவ்ளோ நாளா தோணாத ஒரு விஷயம் அன்னா ஹசாரே போராட்டம் ஆரம்பிச்ச உடனே தான் எல்லோருக்கும் தோணுது .
ஒரு கடையில எம்.ஆர்.பி க்கு மேல பொருள் விற்பதை கேக்க துணிச்சல் இல்லாத மக்கள், எப்படி ஊழலுக்கு எதிரா போரடுவாங்க.
ஒருத்தன் ஒன்னு செய்யறான், அது எதுக்குன்னு யோசிக்காம ஆட்டு மந்தை மாதிரி அவன் செய்யறது செஞ்சுட்டு, அப்பறம் வேற ஒன்னு செய்யும் போது இத மறந்துட்டு அதை செய்வாங்க.
அதை எல்லாம் விட்டுட்டு இனியாவது திருந்துங்க மக்களே..........

0 comments:

ரசிகர்கள் Vs ரசிகர்கள்

"இன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள் போல் முட்டாள்கள் எங்கும் பார்க்க முடியுமா என்பது எனக்கு கொஞ்சம் சந்தேகம் உள்ளது."
"எதுக்குயா இப்படி சொல்ற? அவங்கள பத்தி என்ன நெனச்ச ? என்னவெல்லாம் பண்றாங்க தெரியுமா மன்றம் மூலம் எவ்ளோ பண்றாங்க, நடிகைகளுக்கு கோவில் கட்ராங்க, கட் அவுட்டு வைக்கறாங்க, பால் குடம் எடுக்கறாங்க, பால் அபிசேகம் பண்றாங்க படம் ரிலீஸ் ஆனா உடன் டிக்கெட் எவ்ளோ ரூபாய் கொடுத்தும் படம் பாக்கறாங்க. அப்படி பட்டவங்கள முட்டாள்னு சொல்றியே "

"கொஞ்சம் இருங்க நான் சொல்ல வந்தத சொல்றேன். நீங்க சொல்றத பத்தி சொல்ல நான் சொல்ல வரல"

"என்ன சொல்ல வந்தியோ சொல்லிதொல"

பொழுதுபோக்கின் ஒரு அம்சம் தான் சினிமா. நானும் சினிமா பார்ப்பவன் தான், சினிமாவாக மட்டும் பார்ப்பவன். அதில் குறைகள், குற்றங்கள் இருக்கும். அதனால் யாரும் சினிமாவை வெறுப்பதில்லை. ஆனால் பாவம் அதனை சார்ந்தவர்கள் தான், குறிப்பாக நடிகர்கள் நிலைமை கொஞ்சம் திண்டாட்டம் தான். அவரின் படம் வெற்றி பெற்றால் கொண்டடபடுகிறார்கள். தோல்வி அடைந்தால் இழிவு படுத்தபடுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் அல்ல விளையாட்டிலும் நடக்கிறது.
அதிலும் குறிப்பாக தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு அவர்களின் நிலமையோ ரொம்ப மோசம். எஸ்.எம்.எஸ் களில், பேஸ்புக், ட்விட்டர் போன்றவை மூலம் அவர்கள் மிக மோசமாக இழிவுபடுத்தபடுகிறார்கள். தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை இழிவு செய்வது என்பது மனிதன் செயல் அல்ல. அவர்களும் மனுசங்க என்பதை மக்கள் உணரவில்லை. அவர்களை இழிவுபடுத்துவதால் அவங்களுக்கு கெடைப்பது என்னனுதன் தெரியல. ஒரு பெரிய நடிகரின் ரசிகர்கள் இன்னொரு பெரிய நடிகரை கேவலமாக சித்தரிப்பது, அவர்கள் இவரை கேவல்படுதுவது என தொடர்கிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்க இதையும் ஒரு வேலையா செய்றவங்கள பாத்தா எனக்கு கடுப்புதான் ஆகுது. இனியும் இவங்க திருந்துவங்காளானு தெரியல?
-------------------------------------------------------------------------------------

இத பத்தி இங்க எழுத காரணம் சில பல மாதங்கலாவே நடிகர்களை இழிவு செய்து,
எஸ்.எம்.எஸ் லயும், பேஸ்புக் லயும் அப்டேட்ஸ் கடுப்பேத்திடே இருந்துச்சு. அதான் அதை பத்தி இங்க பதிவு போடுறேன்.

0 comments:

மயக்கம் என்ன - ஏழாம் அறிவு- வேலாயுதம்-

தீபாவளிக்கு வெளிவரபோவதாக சொல்லப்படும் இந்த மூன்று படங்களின் பாடல்கள் எப்படி இருக்குது?.நாமளும் கொஞ்சம் அலசுவோம்.
இருக்கற பிரச்சனைல இது இப்ப தேவையானு. நீங்கா கேக்கறது தெரியுது. என்ன பண்றது, இப்போதைக்கு ஒரு படம் கூட பாக்கல. பாத்து இருந்த அதை பத்தி எழுதி இம்சை பண்ணி இருப்பேன். அதனால பாட்டுகள பற்றியும் எழுதலாமேன்னு இந்த பதிவு

மயக்கம் என்ன?
தற்போது ஹிட் லிஸ்டில் இடம்பிடித்து பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறது. தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தின் பாடல்கள். இசையமைத்து இருப்பவர் - ஜி.வி. பிரகாஷ்குமார். படத்தோட டைரக்டர் தனுஷோட அண்ணன் தான்.படத்துல செல்வராகவன், தனுஷ் ரெண்டு பேருமே பாட்டும் எழுதி பாடியும் இருக்கறாங்க. "ஓட ஓட தூரம் கொரையாள " எதார்த்தமான பாடல் வரிகளோடு தனுஷ் குரலில் கேட்க மிக நன்றாகவே உள்ளது. "காதல் என் காதல் " பாடலும் இப்போது செம ஹிட். இந்த பாட்டுல தனுஷ் பாடும்
" வெட்ரா அவள, கொல்றா அவள, தேவையே இல்ல " வரிகள் தான் இப்போது இளைஞர்களின் விருப்பமான வரிகள். எனக்கும் இந்த ரெண்டும் பிடிச்சு போச்சு.
அது மட்டும் இல்லாம ட்ரைலர் ல கொஞ்சம் நம்மை கவர்கிறார்கள்.. தீபாவளிக்கு விஜய், சூர்யாவுக்கு தனுஷ் சரியான போட்டியா இருக்க போகிறார்.


ஏழாம் அறிவு
சூர்யா - ஸ்ருதிஹாசன் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள படம். முருகதாஸ் படம் என்பதால் ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
இந்த படத்திற்கு இசை- ஹாரிஸ்ஜெயராஜ்.
ஆனால் மயக்கம் என்ன? கொடுத்த இம்பாக்டை, ஏழாம் அறிவு பாடல்கள் கொடுக்க வில்லை .. ஹரிஷ் ஜெயராஜ் வழக்கம் போல பழைய ட்யூன்களையே தந்து இருப்பது கடுபெற்றுகிறது. ஒரே பாடல் எஸ்.பி.பி பாடியுள்ள " யம்மா யம்மா காதல் பொன்னம்மா " பாடல் மட்டும் ரசிக்கும்படியாக உள்ளது. சூர்யாவின் வித்தியாச கெட்டப்கள்,ஏ.ஆர். முருகதாஸ் இயக்கம் என ரசிகர்களின் ஹீர்பீட்டை இப்போதே எகிரவைதுள்ள படம்.



வேலாயுதம்
நமது இளைய தளபதி நடித்து இருக்கும் படம். தொடர் தோல்விகளால் நொந்து இருக்கும் விஜய் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்து இருக்கும் படம். படத்தின் இயக்குனர் -ராஜா(ஜெயம் , எம்.குமரன், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி போன்ற தெலுங்கு ரீமேக் படம்களை தனது தம்பியை வைத்து மட்டும் இயக்கியவர்). தற்போது சொந்த கதையில் முதல் முறையாக விஜய்யை வைத்து இயக்குகிறார்.
படத்திற்கு இசை -விஜய் ஆன்டனி,
இதிலும் வழக்கம் போல் விஜய் அறிமுக பாடல் "சொன்னா புரியாது" , கடுபேற்றுகிறது, சங்கீதா ராஜேந்திரன் குரலில் " மாயம் செய்தாயோ " பாடல் பளிச். மற்றொரு பாடல் "மொளச்சு மூணு இலைய விடல பாடல் " காய்கறிகள் வாசனையுடன் கேட்க இனிமையான மெலடி.
மற்றபடி மற்றவை வழக்கம் போல்.




0 comments:

நான் ரசித்த பாடல்கள்- வெண்ணிலா கபடி குழு

நான் எவ்வளவோ பாடல்களை கேட்டு இருக்கிறேன். "மன்னிக்கவும், நாம் கேட்டு இருப்போம்", அவற்றில் சில பாடல்கள் மட்டும் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும் அப்படி எனக்கு பிடித்த பாடல் தான் வெண்ணிலா கபடி குழு பட பாடல்கள் . இதை நான் இப்போது இங்கே எழுதுகிறேன் என்றால் இன்று இந்த படத்தை சன் டிவியில் இன்று மீண்டும் பார்த்தேன். விஷ்ணு - சரண்யா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காகவே எவ்வளவு முறை வேண்டுமானாலும் பார்ப்பேன். ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் சரண்யாவின் எக்ஸ்பிரசன்ஸ் சான்சே இல்லை.

இந்த படத்தின் இசையமைப்பாளர் செல்வகணேஷ், அவருக்கு இது முதல் படம். முதல் படத்திலேயே பாடலிலும் சரி பின்னணி இசையிலும் சரி பின்னி எடுத்து இருக்கிறார். காதல் காட்சிகளில் வரும் அழகான பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்தமானது. இப்படம் வெளிவரும் முன்பே ஹிட்டடித்த பாடல் "லேசா பறக்குது மனசு" கார்த்திக் - சின்மயி இன் குரல்களில் இனிமையான மெலடியில் மனதை வருடுகிறது. கார்த்திக்கின் குரலில் மற்றொரு பாடலான "பட பட வென " பாடல் அந்த அளவிற்கு மெலோடியாக இல்லை என்றலும் கேட்கும்போது இனிமை. ஹரிசரண் குரலில் "உயிரில் ஏதோ " பாடல் காதல் பிரிவை காட்டும் சூப்பர் மெலடி.

மெலடி பாடல்கள் எப்போதும் எனது சாய்ஸ். அதனால்தான் இந்த படத்தில் வந்த மூன்று பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
-------------------------------------------------------------------------------

0 comments: